செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

மாலைதீவு முன்னாள் அதிபர் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், போலீஸ் அதிகாரிகளால் கோர்ட்டிற்கு தரதரவென இழுத்து செல்லப்பட்டார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் (வயது 47). இவர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஆவார். இவர் கடந்த 2012 பிப்ரவரி மாதம் அதிபர் பதவியில் இருந்தபோது, அந்த நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது. 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் முகமது நஷீத்தை போலீசார் கைது செய்தனர்.


 அவர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதன் விவரம் வெளியிடப்படவில்லை. அதிபர் முகமது நஷீத்தை போலீசார் கோர்ட்டிற்கு அழைத்து செல்ல முயற்சி செய்தனர். முகமது நஷீத் செய்தியாளர்களிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் போலீசார் அவரை தடுத்துவிட்டனர். ஒத்துழைப்பு கொடுக்காததை அடுத்து போலீசார் அவரை தரதரவென இழுத்து சென்றனர். இதற்கிடையே அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் வழக்க மறுக்கப்பட்டுள்ளது, அவர் தனது சார்பில் வழக்கறிஞரை நியமனம் செய்ய மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது உள்பட, மாலத்தீவில் தற்போது உள்ளநிலவரங்கள் மிகவும் கவலையளிக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் தற்போது அமைதி திரும்பவேண்டும், மாலைதீவுகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட வரம்புக்குள் அவர்களி dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக