தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி பிரச்சார குழு மாநில
நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்
நடந்தது.
மத்திய பா.ஜ.க. அரசின் வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம் தாழ்த்தி வன்மத்தை கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மைக்கு எதிராகவும் – நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்து விடும் என்றும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும் கடந்த 9.1.2015 அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இக்கூட்டம் ஆதரிக்கிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவதும்–பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் சுயமாக எழுந்து நிற்பதை பொறுக்காத பாஜக ஒரு பொம்பளை ரவுடியை மந்திரியாக்கி தங்கள் அஜண்டாவை நிறைவேத்த துடிக்கிறார்கள்
மதுப்பழக்கம் மிகப்பெரும் சமூகப்பிரச்சினையாக தமிழகத்தில் உருவெடுத்துள்ளது. மதுப்பழக்கம் 8–10 சதவீதம் அதிகரித்துள்ளது. 2004–05–ம் ஆண்டில் 7,371 ஆக இருந்த டாஸ்மாக் மது கடைகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2010–11–ம் ஆண்டில் 6,250 ஆக குறைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை என்றிருந்ததை காலை 10 மணி முதல் இரவு 11 மணியாகக் குறைத்தது. புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவித்தது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,800 ஆக அதிகரித்துள்ளது. மது விற்பனை வளர்ச்சியையே தனது முக்கிய குறிக்கோளாக கருதும் அ.தி.மு.க. அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
பா.ஜ.க. ஆட்சியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களை நிறுத்தப்போவதாக அறிவித்திருப்பது பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு உடனடியாக மத்திய அரசினைத் தொடர்பு கொண்டு, இம்முடிவு தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் – மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் இந்த கூட்டம் கண்டிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. மருத்துவ அணி மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டமும் இன்று காலை தேனாம்பேட்டை, அன்பகத்தில் நடந்தது.
மருத்துவர் அணி பிரிவுத் தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மருத்துவர் அணிப்பிரிவு துணைத் தலைவர் டாக்டர் செந்தில்நாதன், மருத்துவர் அணிப்பிரிவு செயலாளர் டாக்டர் என்.எஸ்.கனிமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மருத்துவர் அணிப்பிரிவு துணைச் செயலாளர்கள் டாக்டர் ஆர்.கோகுல் கிருபா சங்கர், டாக்டர் செ.வெற்றிவேல், டாக்டர் வல்லபன், டாக்டர் பா.சேகர், டாக்டர் ஆர்.ராஜேஸ்வரி, டாக்டர் ஜெ.அருண். டாக்டர் ஆர்.டி.அரசு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக