சனி, 14 பிப்ரவரி, 2015

மெரினாவில் முத்த மழை! கலாசார காவலர்களை ஓட விரட்டிய காதலர் தினம்

மெரினா கடற்கரையில் இன்று திரண்ட காதல் ஜோடிகள் முத்த மழை பொழிந்து காதலர் தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மெரினாவில் இன்று பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்த காதல் ஜோடிகளின் உரையாடல் இது.
பெண்: எனக்கு என்னடா வாங்கி வந்த?
ஆண் : முதலில் நீ என்ன வாங்கி வந்தன்னு சொல்லு? உடனே அந்த பெண் தான் ஆசையாக வாங்கி வந்த காதல் ஜோடி முத்தமிடும் பொம்மையை காட்டினார். உடனே காதலன் ஆவேசமாகி, நான் இதனை கேட்கவில்லை வேற என்ன இருக்கு... என்று கேட்டுக் கொண்டு கையால் சிக்னல் காட்டுகிறார். அடுத்த நொடியே ஈருடல் ஒருடலாகி இருவரும் முத்தமழை பொழிந்தனர்.

இதே போல ஒரே ஒரு ஐஸ்கிரீமை வாங்கி ஒன்றாக சுவைத்தனர் சில காதல் ஜோடிகள். ரோஜா மற்றும் மல்லிகை பூக்களை காதலியின் கூந்தலில் வைத்து அழகு பார்த்தனர் வாலிப பட்டாளங்கள். இவர்களை தூரத்தில் இருந்து படம் பிடித்த பத்திரிகை போட்டோ கிராபர்கள் சிலர், அவர்களின் அருகில் சென்றதும் மெய் மறந்திருந்த ஜோடிகள் ஓட்டம் பிடித்தனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக