உலகின் அடுத்த தலைமுறை ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும்
மருந்து நமது காலடி மண்ணிலிருந்து உருவாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து
கண்டங்களில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா,
ஆஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில்
சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த
ஆய்வில், இதுவரை அறியப்படாத ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும்
மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது
தெரிய வந்துள்ளது. அதானே பாத்தேன் நம்ம வீட்டு நாய் எப்ப பாத்தாலும் மண்ணை கிண்டி கிண்டி..... அடடே
இந்த கண்டுபிடிப்பு இயற்கை உலகின் மீது புதிய சிந்தனைகளை உருவாக்குகிற அதேநேரம் வருங்காலத்தில் மருந்துகளுக்கான வழிகாட்டியாகவும் இருக்கிறது. இதையடுத்து குகைகள், வெப்ப நீரூற்றுகள், தீவுகள் மற்றும் நகர பூங்காக்கள் போன்ற தனித்த சுற்றுச்சூழலில் உள்ள மாதிரிகளையும் சேகரிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
“சுற்றுச்சூழலிருந்து கிடைத்த பாக்டீரியாக்கள் திகைப்பூட்டும் பல புதிய மூலக்கூறுகளை உலகிற்கு வழங்கியது. அதில் பல மூலக்கூறுகள் புதிய மருந்துகள் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நம்பமுடியாத பன்முகத்தன்மையே நுண்ணுயிரிகள் மூலம் ரசாயன உற்பத்தி செய்யும் நமது கனவுக்கான முதல் படி" என்று ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் சீன் பிராடி கூறினார்.
‘மண்ணிலிருந்து மருந்து’ என்ற இந்த திட்டத்திற்காக பொது மக்களிடம் இருந்தும் சோதனை மாதிரிகள் வரவேற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக