வியாழன், 22 ஜனவரி, 2015

'தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் இந்தியர்களே..' யாசிதி குழு தலைவி பேட்டி!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட யாசிதி இன குழு லைலா கவுதெய்தா தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. ஈராக்கில் கணிசமாக வசிக்கும் யாசிதி இன மக்கள் தங்களது வழிபாட்டு முறைகளாலும், சமய நம்பிக்கைகளாலும், இந்துக்களோடு ஒத்துப்போகக்கூடியவர்கள். இந்நிலையில், ஈராக்கில் எழுச்சி பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யாசிதி இன மக்களை குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். பெண்களை செக்ஸ் அடிமைகளாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவிடம் ஆதரவு திரட்டுவதற்காக, யாசிதி அமைப்பு ஒன்று லைலா என்ற பெண் தலைமையில் டெல்லி வந்துள்ளது. ஒன்இந்தியாவுக்கு லைலா அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி: மனிதாபிமானம் உள்ள இந்தியர்கள் யாசிதி இன மக்கள் கஷ்டப்படும்போது இந்தியர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
அமெரிக்காவில் சில இந்தியர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தின் மூலம், இந்தியர்கள் பலருடன் தொடர்பு கிடைத்தது. அதுதான் இந்தியா வர என்னை தூண்டியது. இந்தியர்களிடம் யாசிதி இன மக்களுக்கு மிகவும் பிடித்ததே, பிறரை துன்புறுத்தாமல், ஒற்றுமையாக வாழும் கலைதான். எல்லாவற்றையும்விட மனிதாபிமானத்தை இந்தியர்கள் உயர்வாக பார்க்கிறார்கள். இந்துக்களுடன் ஒத்துப்போகும் யாசிதிகள் இந்துக்களுக்கும், எங்களது மத நம்பிக்கைக்கும் நிறைய ஒற்றுமைகளும் உள்ளன. முக்கியமான இந்துக்களை போலவே நாங்களும் மறுபிறவியை நம்புகிறோம். பழைய ஆடையை மாற்றிவிட்டு புதிய உடையை உடுத்துவதை போலத்தான் உடலும் ... என்றுமே ஆத்மா அழியாது. மீண்டும் பிறப்பெடுத்து வரும் என்ற இந்துக்களின் நம்பிக்கையுடன் நாங்களும் ஒத்துப்போகிறோம். எனவே, ஒரு வாரமாக இந்தியாவில் தங்கியிருந்து, இங்கு நிகழ உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மக்களிடம் சந்திப்பு நடத்த உள்ளோம். தற்கொலை செய்யும் செக்ஸ் அடிமைகள் இத்தனை மாதங்களுக்கு பிறகும், யாசிதிகள் நிலைமை மேம்படவில்லை. தங்குவதற்கு அடிப்படை வசதிகள் இன்றிதான் தவித்து வருகின்றனர். செக்ஸ் அடிமைகளாக சிக்கிய பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது. அந்த பெண்களுக்கு கவுன்சலிங் கொடுத்து தற்கொலையை தடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. சர்வதேச நாடுகளே உதவுங்கள்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து அப்பாவிகளை காப்பாற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டியது அவசியம். இந்தியா போன்ற நாடுகள் சிறுசிறு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டாலும் எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும். ஏன் யாசிதிகள் மீது கோபம்? யாசிதி மக்கள் சாத்தான்களை வழங்குவதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். யாசிதிகளுக்கு என்று புனித நூல் கிடையாதாம். எனவே யாசிதிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கிற சித்தாந்தத்தை தீவிரவாதிகள் கொண்டுள்ளனர். அல்லது இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போக்கு மாறியுள்ளதா? ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் சில யாசிதி மக்களை விடுதலை செய்தனர். எனவே அவர்கள் போக்கு மாறிவிட்டதாக கருதிவிட முடியாது. அவர்கள் விடுவித்தவர்களில் பெரும்பாலானோர் 90 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும்தான். முதியவர்களை வைத்துக் கொள்வது தீவிரவாதிகளுக்கு சிரமமாக இருப்பதால், அவர்களைவிட்டுள்ளனர். யாசிகள் இனப்படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரிவதில்லை. அமெரிக்கா உதவி அமெரிக்காவின் வெள்ளைமாளிகை முன்பாக யாசிதி இன மக்கள் தர்ணா நடத்திய பிறகுதான், தீவிரவாதிகளுக்கு எதிராக விமான தாக்குதல் நடத்த ஒபாமா உத்தரவிட்டார். மனிதாபிமான உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. பெரும்பாலான யாசிதி மக்கள் ஈராக்கை விட்டு வெளியேற தயாராக உள்ளனர். ஆனால் அடைக்கலம் தர பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை. பெங்களூரு போகிறோம் விரைவில் பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களுக்கும் எங்கள் குழு செல்லும். அங்கு கலாச்சார திருவிழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க வரும் மக்களிடம் நாங்கள் எங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி ஆதரவு கேட்போம். ஈராக் இனிமேல் முன்னேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. சிறுபான்மையினருக்கு அந்த நாடு பாதுகாப்பானது கிடையாது. இவ்வாறு லைலா தெரிவித்தார்.tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக