செவ்வாய், 25 நவம்பர், 2014

BJP Ex மேயர் கீதா மாலன் : கவுரவ கொலைகளை செய்யலாம்? காதல் திருமணங்களை தடுக்க......

deputy mayor of Junagadh city Geeta Malan suggested "honour killings" of Koli community girls, who elope with boys from another community.அகமதாபாத்: குஜராத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜ மேயர் பேசுகையில், காதல் திருமணங்களை தடுக்க கவுரவ கொலை செய்ய வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திரமோடி லோக்சபாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அங்கு பாஜவின் மூத்த தலைவரும், மூத்த எம்எல்ஏவுமான ஆனந்தி பென் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் அமைச்சரவையில் போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என கோலி சமூகத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனியெல்லாம் இப்படி வாந்தி வாந்தியாதான் வரும்? 


இந்நிலையில் கோலி சமூகத்தினருக்கு அமைச்சரவையில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி அகமதாபாத் அருகே உள்ள பகோதரா கிராமத்தில் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குஜராத் அமைச்சர் புருஷோத்தம் சோலங்கியின் சகோதரரும், எம்எல்ஏவுமான ஹிரா சோலங்கி செய்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சரவையில் கோலி சமூகத்தினருக்கு கூடுதல் இடம் அளிக்க வேண்டும். இதற்காக அனைத்து கோலி சமூக தலைவர்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இதனை மாநில அரசிடம் தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.

இருந்த போதிலும் இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் புருஷோத்தம் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஜூனாகத் நகரத்தை சேர்ந்த பாஜ முன்னாள் மேயர் கீதா மாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், காதல் திருமணங்களை தடுக்க கவுரவ கொலைகளை செய்யலாம் என்றார். இதுகுறித்து புருஷோத்தமிடம் கேட்ட போது, அவரது பேச்சுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது கீதா மாலனின் தனிப்பட்ட கருத்து.

எனது சமூகத்தினரை சேர்ந்தவர்களுக்கு கவுரவ கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற எண்ணம் எதுவும் கிடையாது என்று தெரிவித்தார்.புருஷோத்தம் சோலங்கி சமீபத்தில்தான் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு கால்நடை பராமரிப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் கவுரவ கொலைகளுக்கு எதிராக கண்டன குரல்கள் எழும்பி வரும் வேளையில் பாஜவை சேர்ந்த முன்னாள் மேயர் கவுரவ கொலையை ஆதரித்து பேசியிருப்பது குஜராத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - See more at: /tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக