செவ்வாய், 25 நவம்பர், 2014

விஷால் : ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்த் நீக்க வேண்டும்!

கோவை,நவ.24 (டி.என்.எஸ்) என்னை தவறாக பேசிய ராதாரவி மற்றும் காளை இருவரையும் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை புலிய குளத்தில் பேனாவும், கானாவும் என்ற நட்சத்திர கலை விழா நடைபெற்றது.>இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நடிகர் சங்க கூட்டத்தை வருகிற 30–ந் தேதி கூட்டி என்னை விலக்குவதாக கூறியுள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாக நிரூபித்தால் நடிகர் சங்கத்தை விட்டு சென்று விடுவேன்.நான் என்ன தவறு செய்தேன்? என்பதை நிரூபிக்க வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோரைத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015–ம் ஆண்டு நடைபெற இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட போகிறேன்.
தலைவர், செயலாளர் பதவிகளில் எந்த பதவிக்கு போட்டியிடுகிறேன் என்பதை பிறகு அறிவிப்பேன்.

வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. இளம் தலைமுறை நடிகர்கள் சங்கத்தில் பொறுப்பேற்று திறம்பட செயல்பட ஆர்வமாக உள்ளனர். விரைவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். திருட்டு வி.சி.டி.யை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்தார். chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக