செவ்வாய், 25 நவம்பர், 2014

டிராபிக் ராமசாமியின் அதிமுகவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!


அ.தி.மு.க.வுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பொதுஇடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக முழு அளவில் காவல் துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்கள் மீது எந்த வழக்கையும் தமிழக காவல் துறை பதிவு செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்களின் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி ஆகியோரை தங்கள் கடமையில் இருந்து தவறிய குற்றத்தை இழைத்தவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் இது போன்று சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களிலும், தர்ணாக்களிலும் ஈடுபடும் கட்சிகளின் மீது தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். அய்யா  அவாள் நீதித்துறையின் நம்மவா! திமுகவுக்கு எதிரா வழக்கு போட்டு பாருங்க நீதிபதிங்க  எல்லாம் ஓவர்டைம் வேலை பார்பாய்ங்க ! 


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்து தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக