செவ்வாய், 25 நவம்பர், 2014

‘மானே தேனே..... கவர்ச்சி நாயகி சுபஸ்ரீகங்குலி ஹீரோயினாக நடிக்கிறார்

சென்னை: ‘மானே தேனே பேயே‘ படம் மூலம் பெங்காலி மொழி கவர்ச்சி ஹீரோயின் சுபஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனர் கிருஷ்ணா கூறியது: ஏற்கனவே நான் இயக்கிய ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகளாக இருந்ததுபோல் தற்போது இயக்கும் இப்படமும் முற்றிலும் வித்தியாசமான கதையாக உருவாகி இருக்கிறது.
சமகாலத்து இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை யதார்த்தங்களுடன்  சொல்லப்படுகிறது. ‘நெடுஞ்சாலை‘யில் நடித்த ஆரி ஹீரோ. வங்காள மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ள கவர்ச்சி நாயகி சுபஸ்ரீகங்குலி ஹீரோயினாக நடிக்கிறார். டேனியல்பாலாஜி, சஞ்சனா, சென்ட்ராயன், செவ்வாலை, மயில்சாமி, அர்ஜூனன், மீராகிருஷ்ணன், மதுமிதா நடிக்கின்றனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா.சி. இசை அமைக்கிறார். கல்சன் மூவிஸ் தயாரிக்கிறது. - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக