வெள்ளி, 28 நவம்பர், 2014

மோடியின் வாரணாசியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள்! டுபாக்கூர் மோடியின் டுபாகூர் அலை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வென்றதாக்க் கூறப்படும் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
வாரணாசி தொகுதியில் தற்போது வாக்காளர் சரிபாக்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. வாரணாசியில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 8 தொகுதியில் வாக்காளர் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. இந்த முடிவுகள் தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 3,110,573 (மூன்று லட்சத்து பதினோராயிரத்து அய்நூற்றி எழுபத்தி மூன்று) வாக்குகாளர்கள் போலி என தெரியவந்துள்ளது.
வாரணாசியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இதுவரை சரிபார்க்கப்பட்ட அய்ந்து லட்சம் வாக்காளர்களில்  முக்கால்வாசி போலி வாக்காளர்கள் என தெரியவந்தது.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடந்து நடந்துகொண்டு இருக்கிறது. மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலி வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக்க் கூறும் போது அதிக இடங்களில் முழுப் பட்டியலுமே போலி வாக்காளர் பட்டியலாக உள்ளது. பட்டியல் சரிபார்க்கும் பணியில் தொடர்ந்து போலி வாக்களர் பட்டியல் தான் வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் பல்வேறு இடங்களில் இந்தப்பணி நடந்து வருகிறது. பட்டியலில் பலர் ஒரே பெயரை 4 முதல் அய்ந்து இடங்களில் பதிவு செய்து வைத்துள்ளார். இது கடந்த பிப்ரவரி முதல் ஏபரல் வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக நடந்துள்ளது. இதன்படி வாரணாசி மொத்த வாக்காளர்களில் 6 முதல் 8 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்களாக இருக்ககூடும் என்று தெரிகிறது, சரிபாக்கும் பணி தொடந்து நடைபெறுகிறது என்றார்.
போலிவாக்காளர்கள் கண்டறியப்பட்டதெப்படி?
தற்போது நாடு முழுவதும் வாக்காளர் சேர்க்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. இதில் பழைய வாக்காளர் பட்டியலும் சரிபார்க்கும் பணியும் நடைபெறுகிறது. புதிதாக வாக்களர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும் முதலில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் முகவரிகளும் ஒன்றாக இருக்க அவை மீண்டும் சரிபார்க்கப்படும். அப்படி ஒரே பெயர் முகவரி பல்வேறு இடங்களில் உள்ள தொகுதியில் இருப்பவை தனித்து எடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் போலியானவை என்று உறுதிசெய்யபட்டு போலியான வாக்காளர்கள் பட்டியல் கணக்கிடப்படுகிறது. இப்படி கணக்கிடப்பட்டதில் தான் இதுவரை 3 லட்சத்திற்கு மேல் போலிவாக்காளர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. வக்காளர் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
தேர்தல் அதிகாரி தயாசங்கர் உபாத்தியா கூறியதாவது,
வாரணாசி பிண்டர சட்டமன்றத் தொகுதியில் 35982 போலி வாக்களர்கள், அஜ்கரா சட்டமன்றத் தொகுதியில் 15825, சிவபூர் சட்டமன்றத் தொகுதில் 10981, ரோஹியா சட்டமன்றத் தொகுதியில் 19659, வடக்கு வாரனாசி சட்டமன்றத் தொகுதியில் 70684, தெற்கு வாரணாசி சட்டமன்றத் தொகுதியில் 69397, சேவ்புரி சட்டமன்றத் தொகுதியில் 7500 போலிவாக்காளர்கள் உள்ளனர். அதிகமாக கெண்ட் சட்டமன்றத் தொகுதியில் 81697 போலிவாக்களர்கள் உள்ளது என்று கூறினார். உடனடியாக இவர்கள் பெயர் அனைத்தும் நீக்கப்படுகிறது என்றும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி அறிக்கை
வாரணாசியில் போலிவாக்களர் என்ற தகவல் கிடைத்தவுடன் ஆம் ஆத்மி கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து டில்லியில் வெளியிட்ட அந்த அறிக்கையில் “நாங்கள் தேர்தலின் போது மத்திய தேர்தல் ஆணையத்திடமும் மாநில தேர்தல் ஆணையத்திடமும் பாஜகவினர் அதிக எண்ணிக்கையில் போலி வாக்காளர்களைச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றனர் என ஆதாரத்துடன் புகார் அளித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்கள் புகாரைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. வாக்குச் சாவடியிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. ஒரே நபர் நான்கு வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இவை அனைத்தும் பாஜகவின் ஆதரவுடன் நடந்துவந்தது.
மோடி தேர்தெடுத்துள்ள ஜெயபூர் கிராமம் அடங்கியுள்ள கெண்ட் சட்டமன்ற தொகுதில் அதிக அளவு போலிவாக்களர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாரணாசி தொகுதியில் மோடி 3 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

.viduthalai.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக