வெள்ளி, 28 நவம்பர், 2014

3வது மொழியாக ஜெர்மன் மொழியை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

அரசு செய்த தவறுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் நடப்பாண்டில் 3வது மொழியாக ஜெர்மன் மொழி தொடர பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெர்மன் மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதத்தை போதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிராக மாணவர்களின் பெற்றோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், ஜெர்மன் மொழி கற்பிப்பது தொடர்பாக ஜெர்மன் இந்தியா இடையிலான ஒப்பந்தம் சட்ட விரோதம் என்பதால், ஜெர்மன் மொழியை கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் இனியும் கற்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.இந்த ஒப்பந்த விவகாரங்களில் அரசு செய்த தவறுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், ஜெர்மன் மொழியை தொடர்ந்து கற்பிப்பது தொடர்பான முடிவை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக