வெள்ளி, 28 நவம்பர், 2014

அருப்புகோட்டை பள்ளிமாணவன் வகுப்பிலேயே வெட்டி கொலை!

தூத்துக்குடி மாவட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கோபல் என்பவரின் மகன் பாஸ்கர் (14), பந்தல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 8.50 மணிக்கு பள்ளிக்கு வந்தார் பாஸ்கர். வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் பாஸ்கரின் நெற்றியில் அரிவாளால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த மாணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பரின் மகன் மாரிஷ்வரன் (19), மாந்திரிகம் செய்து வருபவர் என்றும், கடந்த 8 மாதங்களுக்கு முன் நரபலி கொடுப்பதற்காக பாஸ்கரனை கடத்தி சென்றதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பாஸ்கர் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பந்தல்குடி போலீசார் மகேஷ்வரன், மாவட்ட முதன்மை தலைவர் ஜெயகுமார் ஆகியோர் அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக