வெள்ளி, 28 நவம்பர், 2014

பள்ளிக்கூட ஆசிரியரை தாக்கிய அருளானந்தம் டுபாக்கூர் MLM சதுரங்க வேட்டை ஆசாமி! இன்னும் கைது செய்ய படவில்லை


கோடம்பாக்கத்தில் உள்ள மிகப் பழமையான பள்ளி அது. சாதாரண நடுத்தர வர்க்க குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விசில் அடித்து மாணவர்களை ஒழுங்குப்படுத்துகிறார். மாணவர்களின் கூட்டத்தில் இருந்த ஒரு மாணவன், ஆசிரியர் விசில் அடிப்பதைப் போலவே விசில் அடிக்கிறான். கடுப்பான ஆசிரியர், மாணவனை அறைந்து தலைமை ஆசிரியரின் முன் நிறுத்துகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த மாணவன், ’நான் வீட்டுக்குப் போக வேண்டும். உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லி வீட்டிற்கு சென்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் பள்ளிக்குள் திமுதிமு என நுழைந்த ரவுடிகள் அந்த உடற்கல்வி ஆசியரை சூழ்ந்துகொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். தப்பித்து வகுப்பறைக்குள் ஓடியவரை விடாமல் துரத்திச் சென்று அடித்தார்கள். மாணவர்களின் கண் முன்னால், சக ஆசிரியர்களின் கண் முன்னால் இந்த தாக்குதல் நடந்தது.
வகுப்பறையையும் உடைத்து நொறுக்கி விட்டு அந்த கும்பல் வெளியேறியது. வந்தவர்கள் ‘’ரிச் இந்தியா” என்ற முத்திரை பதித்த சீருடை அணிந்திருந்தார்கள். விசில் அடித்து ஆசிரியரிடம் அடிவாங்கிய அந்த மாணவன், ரிச் இந்தியா முதலாளி அருளானந்தின் மகன். மகனை தண்டித்த உடற்கல்வி ஆசிரியரை தன் “ஊழியர்களை“ அனுப்பி தண்டித்திருக்கிறார் அருளானந்து. இவை எல்லாம் அண்மையில் வெளியான செய்திகள்.

யார் இந்த அருளானந்து?

யூ டியூப், கூகுள் உதவியுடன் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள தேடினால் பல சுவராஸ்யங்கள் உங்களுக்கு காத்திருக்கும். ரிச் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட், ஐ.ஏ.எஸ் அகாடமி, எம்.எல்.எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் என தமிழகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும் அருளானந்தம் என்ன தொழில் செய்கிறார்? எப்படி இந்த வருமானம்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

’’இரக்கத்தை எதிர்பார்க்காதே... ஆசையைத் தூண்டு” என்ற ஒன்லைனுடன் வந்தது ‘’சதுரங்க வேட்டை” சினிமா. அந்த எம்.எல்.எம் வாய் வித்தைக்காரர்களின் மோசடிகளை விஞ்சும் வகையில் உள்ளது அருளானந்தின் வளர்ச்சி.

பொது மக்களை ஈர்க்கும் விதத்தில், இவர் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார். கடவுள் ஏன் உலகை படைத்தார் என்று இவர் ஆட்களே, இவரிடம் கேள்வி கேட்பார்கள். நாம் அனுபவிக்கத்தான் கடவுள் உலகை படைத்தார் என்பார் இவர்.

’நான் தலைவர் ஆக வேண்டும். எப்படி இது நடக்கும்?’ என்று ஒருவர் கேட்பார். ‘’நான் என்னைச் சுற்றி தலைவர்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். தொண்டர்களை அல்ல. இன்னும் இரண்டாயிரம் தலைவர்களை உருவாக்கப் போகிறேன். நீங்கள் தலைவர் ஆக வேண்டுமா? தொண்டர் ஆக வேண்டுமா?” என்று கேள்வியையே பதிலாக்கி, வந்திருக்கும் பொது மக்கள் நோக்கி திருப்புவார் அருளானந்து. உடனே கூட்டம் ’தலைவர் தலைவர்’ என்று கத்தும்.

இப்போது பள்ளிக்கூட ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ள அருளானந்தை இன்னும் போலீஸ் கைது செய்யவில்லை. இந்த மர்ம மனிதருக்கு தமிழக போலீசிடம் அவ்வளவு செல்வாக்கு. விரைவில் தப்பிக்கவே முடியாத பெரிய மோசடி வழக்கில் இவர் கைதாகலாம். அப்போது, இவரோடு கை கோத்திருக்கும் அதிகாரிகளும் கம்பி எண்ண வேண்டி வரும்.news.vikatan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக