ஞாயிறு, 9 நவம்பர், 2014

2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி சிதம்பரத்தின் கருத்தும் காங்கிரஸ் பாஜகவின் ரியாக்ஷன்களும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ப.சிதம்பரம் பேசியதற்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் கருத்து தெரிவித்துள்ளன.
ப.சிதம்பரம் பேச்சு டி.வி.பிரபலம் ரஜ்தீப் சர்தேசாய் எழுதிய ‘2014– இந்தியாவை மாற்றிய தேர்தல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தனது ஆலோசனையை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கேட்டு, ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும், கோர்ட்டு முடிவு செய்ய விட்டிருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் பின்வாங்கி இருக்க வேண்டும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய விடமாட்டேன் என்று கூறி இருக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுக்கு காத்திருந்திருக்காமல் அவர் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்திருக்க முடியும்.  எதிர்கட்சிகள் பாவித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் தாயத்தை  ப.சிதம்பரமும் பாவிக்க தொடங்கி விட்டார் அது எதிர்கட்சிகளுக்கு நல்ல மகசூலை தரும் தாயத்து!ம்ம்ம் மன்மோகன் ராஜினாமா செஞ்சுருந்தா பசியே பிரதமராகி இருக்கலாம்ல?வடை போச்சே?  
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிப்பட்ட உடனேயே அரசாங்கம் அதை ரத்து செய்திருக்க வேண்டும்’’ என கூறினார். இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரதீய ஜனதா இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கருத்து தெரிவிக்கையில், ‘‘ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவலை தரும் விஷயம் ஆகும். அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு தவறு செய்து விட்டது என்று முன்னாள் நிதி மந்திரி கூறி இருப்பது, காங்கிரஸ் தனது தவறுகளை மறைக்க முயற்சித்ததையே சுட்டிக்காட்டுகிறது’’ என்றார்.
மேலும், ‘‘ ப.சிதம்பரத்தின் கருத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பே இல்லை என்று தெரிவித்த முன்னாள் தகவல், தொழில் நுட்பத்துறை மந்திரி கபில் சிபலின் கருத்துடன் முரண்பட்டதாக உள்ளது’’ எனவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் ப.சிதம்பரம் பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை 2001 விலையிலேயே வழங்கலாம் என பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து அந்த பரிந்துரையை தொலைதொடர்பு கமிஷன்கள் ஏற்றுக்கொண்டு, உரிமங்கள் வழங்கப்பட்டன.
அந்த நேரத்தில், மத்திய மந்திரிசபை தனது அதிகார வரம்புக்குள் அதை கூட்டாக முடிவு செய்திருக்கலாம்.
எனவே முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் பேச்சை நான் முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவருக்கு சாத்தியம் இருந்த நிலையில், மத்திய மந்திரிசபை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக