ஞாயிறு, 9 நவம்பர், 2014

10 மாணவர்கள் எதிர்ப்பு! அணைப்பு ? சஸ்பென்ட் ! கேரளா கலாசார காவலர்களுக்கு எதிராக சுதந்திர சிந்தனை....

கேரளாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மாணவர்கள் கட்டி அணைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கேரளாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மாணவர்கள் கட்டி அணைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கேரளாவின் எர்ணாகுள கல்லூரியில் உள்ள கல்லூரியில் 'கட்டி அணைக்கும்' போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
கேரளாவின் மாணவர் அமைப்புகளால் துவங்கப்பட்ட 'காதல் முத்த' போராட்டத்தை தொடர்ந்து சமூகத்தில் கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்களுக்கு எதிராக 'கட்டி அணைப்பு' போராட்டம் எர்ணாகுளம் மகாராஜ கல்லூரி மாணவர்களால் வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இந்த போராட்டம் கல்லூரி விதிகளை மீறியது என கல்லூரி நிர்வாகம் மாணவர்களை கண்டித்தது. இதனை மீறி போராட்டம் நடத்தப்பட்டத்தை அடுத்து மாணவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இது குறித்து கல்லூரி முதல்வர் டி.வி.பிரான்ஸி கூறும்போது, "போராட்டம் நடத்திய 10 மாணவர்கள் அடுத்த 10 நாட்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
இந்த போராட்டம் குறித்து நிர்வாகத்திடம் முன் கூட்டியே மாணவர்கள் தெரிவிக்கவில்லை. மேலும், இதற்கும் 'முத்த போராட்டம்' இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதனை அந்த போராட்டத்தோடு ஒப்பிட முடியாது. எதிர்ப்பை மீறி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார். tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக