ஞாயிறு, 9 நவம்பர், 2014

வாசனும் விஜயகாந்தும் ஒரே வாக்குவங்கியை நோக்கி?

 கட்சி ஆரம்பித்து கொள்வது, பெரிய கட்சிகளிடம் பெட்டி வாங்குவதற்குத்தான்.ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வதற்கு அல்ல.தன்னை சுற்றி ஒரு கூட்டம் வரும் என்று தெரிந்தால்தான் பெரிய கட்சி பெட்டி கொடுக்கும்.
சந்தப்பவாத அரசியல் பன்றதுல ஓரத்தரை ஒருத்தர் அடிச்சிக்க முடியாது மூப்பனார் அவங்க பாட்டனார் எல்லாம் விஜயகாந்துக்கு அரசியல் ஆசானாம் யாராவது ஏதாவது தடயம் இருந்தா முதலில் வெளியிடுங்க பிளீஸ் ஒவ்வொரு ஆண்டும் மூப்பனார் நினைவிடத்திற்கு சென்று வணங்கிவிட்டு தான் எந்த காரியத்திலும் இறங்குவாராம் அதனால மலேசியாவில உட்கார்ந்து கிட்டு ஊக்கப்படுத்த்கிக்கொண்டிருக்கிரார் வாசனை 'வாசன் தனியா பிரிந்து வந்து கட்சியை ஆரம்பிக்கும் காரணம் காமராசர் மூப்பனாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற போர்வை தான், உண்மை அதுவல்ல, அமித்ஷா தான் 'தமிழிசை' தான் அவங்க அப்பாவை வைத்துக்கொண்டு சோழியன் குடுமி சும்மா ஆடாதே? விஜயகாந்த் கட்சியை ஆரம்பிக்க நேர்ந்தது ஒரு சிறு ஆக்சிடென்ட் மாதிரிதான் சினிமா வாய்ப்பும் சரக்கும் தீர்ந்து போக கல்யாமண்டபம் நவீன மயமா சொர்க்கத்தை விட கூடுதலா கட்டி அதுல பெண்டாட்டியை உரசற மாதிரி கொஞ்சத்தை ரவுண்டானா கட்டுவதற்காக இடித்து விட்டார்கள் கோயம்பேட்டில் போக்குவரத்து துறை அதில் டென்ஷனாகி தி.மு.க விற்கு எதிரா ஒரு கட்சியை துவக்கி பிறகு சம்பதமே இல்லாமல் தெலுங்கு டப்பிங் படத்தில் வரும் பெயரைப்போல "விருத்தாச்சலம" தொகுதியில் மட்டும் நின்னு ஜெயித்தார்
பிறகு 2011 தேர்தலில் மத்தவங்க புண்ணியத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து போறவரைக்கும் அடையாளம் காட்டப்பட்டு பிறகு உள்ளாட்சி தேர்தலில் ஊதி பெரிதாக்கி அவங்க கட்சி நிர்வாகிங்களும் அடக்கமா பரிசை வைத்துக்கொண்டு பலனை மட்டும் பத்திரமா அனுபவிக்காமல் துண்டை போட்டுக்கிட்டு ஒரே ஆர்பாட்டம் விளம்பரம் அப்படி வலம் வர ஆரம்பித்து ஊடகங்களே செய்தியை அவர்களுக்கு எதிரா அடக்கமில்லாமல் செய்யிறதை வெளிப்படுத்தி விட்டார்கள் அதன் விளைவுகள் அந்தம்மா கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது


முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் துவங்கிஉள்ள கட்சியால், தே.மு.தி.க.,விற்கு பின்னடைவு ஏற்படும் என்ற தகவல், அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் அரசியல் ஆசான் என, மூப்பனாரை வர்ணித்து வருகிறார். மூப்பனார் நினைவு நாளில், அவரது நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.மூப்பனாரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாசன், விஜயகாந்தின் நண்பர்களின் பட்டியலில் உள்ளார்.இதனால், விஜயகாந்த் வீட்டு நிகழ்ச்சிகளில், வாசன் பங்கேற்க தவறியதில்லை. விஜயகாந்த் மகன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் தகவல் அறிந்ததும், வாசன், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று வாழ்த்தினார்.லோக்சபா தேர்தல் நேரத்தில், காங்கிரசுக்கும் தே.மு.தி.க.,வுக்கும் கூட் டணி அமைக்க வாசன் பாடுபட்டார். இது தொடர்பாக, இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், காங்., கட்சியில் இருந்து விலகி, வாசன் புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு விஜயகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியாவில் இருந்த படியே, வாசனுக்கு அறிவுரைகளையும் வழங்கிஉள்ளார் விஜயகாந்த்.அதேநேரத்தில், வாசன் கட்சியால், தே.மு.தி.க., விற்கு லாபமா, நஷ்டமா என்பதை அலசி ஆராயும் பணியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகளும், மாவட்ட செயலர்களும் இறங்கி உள்ளனர்.வாசன் கட்சியால், தே.மு.தி.க.,விற்கு நஷ்டம் ஏற்படவே, வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு களில் இருந்து தெரிய வர, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து, தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்துக்கு, சமீப காலமாக தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.அவர் நடுநிலையாளர்களின் ஓட்டுகளை கூடுதலாகப் பெற்று வந்தார். அப்படிப்பட்டவர்களின் மனநிலை தற்போது மாறிஉள்ளது. இந்நிலையில், அந்த ஓட்டுகளை குறிவைத்து, வாசன் கட்சி ஆரம்பித்துள்ளதால், தே.மு.தி.க., வுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என, தெரிய வந்திருக்கிறது.ஆனால், இதையெல்லாம் விஜயகாந்த் புரிந்து கொண்டதாக தெரிய வில்லை. வாசன், ஆரம்பிக்கும் புதிய கட்சி துவக்க விழாவுக்கு வாழ்த்து கடிதத்துடன் கட்சியினரை அனுப்பி வைக்க முடிவெடுத்திருக்கிறார். விஜயகாந்தை நம்பியிருக்கும், எங்களுக்குத்தான், என்ன செய்வது என புரியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- -நமது சிறப்பு நிருபர்- - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக