செவ்வாய், 25 நவம்பர், 2014

ஏலத்துக்கு வந்தன பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சொத்துகள் 1 வங்கியில் ரூ.149 கோடி கடன் பாக்கி!

பி.ஆர்.பழனிச்சாமி.
பி.ஆர்.பழனிச்சாமி.
மதுரை பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் இந்தியன் வங்கி யில் ரூ.149 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதால் அவர்களின் நிலத்தை ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, விக்கிரமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த அளவைவிட கூடுத லாகவும், சில இடங்களில் அனு மதியே இல்லாமலும் கிரானைட் கற்களை வெட்டியதாக 2011-ம் ஆண்டில் புகார் எழுந்தது. அப் போதைய மதுரை ஆட்சியர் உ.சகாயம் விசாரணை நடத்தி, முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக அறிக்கை தாக்கல் செய்தார்.

வழக்குகளால் முடக்கம்
அவர் மாறுதலான பின் மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா அனைத்து கிரானைட் குவாரிகளிலும் ஜிபிஎஸ் கருவிகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆய்வு நடத்தி முறைகேடுகளைக் கண்டறிந்தார். இதுதொடர்பாக 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் 77 வழக்குகள் மாவட்ட ஆட்சியர் மூலம் மேலூர் நீதிமன்றத்தில் நேரடியாக தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் மீதுதான் அதிக வழக்குகள் பதிவாயின. மேலும், இந்நிறுவனங்களுக்குச் சொந்த மான பல குவாரிகள், அலுவலகங் களுக்கு அரசு ‘சீல்’ வைத்ததால் வர்த்தகம் முற்றிலும் முடங்கியது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்
இந்நிலையில் இந்தியன் வங்கி யில் அடமானக் கடனாக பெற்ற தொகையை பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங் கள் முறையாக திருப்பிச் செலுத்த வில்லை. எனவே அவர்கள் அடமானம் வைத்த சொத்துகளை ஏலம் விடுவதாக இந்தியன் வங்கி நவம்பர் 24-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி இந்தியன் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: 20.11.2014ம் தேதி நிலவரப்படி பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ், அதன் பங்கு தாரர்களில் ஒருவரான கே.தெய்வேந்திரன் ஆகியோர் இந்தியன் வங்கிக்கு 149 கோடியே 99 ஆயிரத்து 28 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இதுபற்றி பல முறை தெரிவித்த பிறகும் அந்நிறு வனத்தினர் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முன்வர வில்லை.
எனவே கடன் பெறுவதற் காக அடமானமாக எழுதிக் கொடுத்த நிலங்களை கையகப் படுத்தியுள்ளோம். இவற்றை ஏலத்தில்விட்டு, கடன் தொகையை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக ஏற்கெனவே ஒருமுறை முயற்சி மேற்கொண்டபோது, பிஆர்பி நிறுவனத்தினர் நீதிமன்றம் மூலம் தடையாணை பெற்றனர். ஆனால் இந்தமுறை நீதிமன்றமும் அனுமதி அளித்துவிட்டதால் ஏலம் விடுவது உறுதியாகிவிட்டது.
மதுரை மாநகர் மற்றும் அதை ஒட்டியுள்ள உத்தங்குடி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, மூகாம்பிகை நகர், வண்டியூர், இலந்தைகுளம், மேலமடை உள் ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 135 ஏக்கர் நிலங்கள் இந்த பட்டிய லில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் காலி மனைகள் அதிகம். ஏலம் விடப்பட உள்ள நிலங்களின் முழு விவரங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. குவாரிகளோ, அது சார்ந்த அலுவலகங்களோ இடம் பெறவில்லை.
கையகப்படுத்தப்பட்ட நிலங் களை பல பிரிவுகளாக பிரித்து இ-டெண்டர் மூலம் ஏலம் நடத்த உள்ளோம். இதற் கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுவிட்டது. வரும் டிசம்பர் 31-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு ஏலம் நடத்தப்படும்.
தற்போதைய சந்தை மதிப் பைக் கணக்கிடும்போது, எங் களுக்கு வர வேண்டிய நிலுவை தொகையைவிட ஏலமிடப்பட உள்ள நிலங்களின் மதிப்பு அதிக மாக இருக்கும் என எதிர்பார்க் கிறோம். எனவே மீதம் இருந்தால் அந்த தொகையையோ, அல்லது நிலங்களையோ முறைப்படி அவர்களுக்கே திருப்பி அளித்து விடுவோம் என்றனர்.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக