புதன், 26 நவம்பர், 2014

டில்லி-சென்னைக்கு புல்லட்ரயில் 300 கி.மீ. வேகம், 6 மணி நேரத்தில்....Delhi

பீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய ரெயில்வே அதிகாரிகள் 100 பேருக்கு பயிற்சி, தற்போதைய ரெயில் நிலையங்களை மறுமுன்னேற்றம் செய்தல், ரெயில்வே பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்றவற்றுக்கு சீனா உதவி செய்கிறது.
இந்த பயிற்சிக்கான திட்டங்களை வகுப்பதற்காக இந்திய ரெயில்வேயின் உயர்மட்ட அதிகாரிகள் சதீஷ் அக்னிகோத்ரி தலைமையில் சீனா சென்றுள்ளனர். அவர்கள் சீனாவின் அதிவேக ரயில் நிறுவன அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த திட்டத்துக்கான செயலாக்க பயிற்சியை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1 லட்சத்து 956 ஆயிரம் கோடி செலவாகும் என அந்நாட்டு பத்திரிகை தெரிவித்திருந்தது. 300 கி.மீ. வேகம்:டில்லி-சென்னை இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் அதிவேக ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், இரு நகரங்களுக்கும் இடையேயான 1,754 கி.மீ. தூரத்தை சுமார் 28 மணி நேரத்தில் கடக்கிறது. ஆனால் புல்லட் ரெயில், மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் இந்த தூரத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே 2,298 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் அதி நவீன புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த புல்லட் ரயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் 8 மணி நேரத்தில் கடந்து விடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் சேவையாக இது கருதப்படுகின்றது.இதற்கடுத்து, டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் சேவையை தொடங்கினால் 2வது புல்லட் ரயில் சேவையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக