செவ்வாய், 7 அக்டோபர், 2014

Skype உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் நிறுத்தம் !

புது டில்லி:"ஸ்கைப்' இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
"ஸ்கைப்' என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும். ஸ்கைப் மென்பொருள் வசதி மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு இணையத் தொடர்பு பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், மலிவான கட்டணத்தில் பார்த்துப் பேசி மகிழ முடியும் என்பதால், மிகுந்த வரவேற்பை "ஸ்கைப்' பெற்றது அதேநேரத்தில், ஸ்கைப் சேவையினால் தங்களது வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாக இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டின.  இந்தியாவிலுள்ள மொபைல் நிறுவனங்கள் இந்திய மக்களை முட்டாளாக்கிகொண்டு இருக்கிறார்கள். இணையதள சேவை கட்டணம் முதலில் 55 ரூபாய்க்கு முப்பது நாட்களுக்கு 2 கிகா பைட் என்று இருந்தது பிறகு 155 ரூபாய்க்கு 1 கிகா பைட் என்று மாற்றினார்கள். பிறகு 198 ரூபாய்க்கு 1 கிகா பைட் அதுவும் 28 நாட்களுக்கு என்று மாற்றினார்கள். இப்பொழுது வாடிக்கையளர்களுக்கு சாதகமான ஸ்கைப் போன்ற வசதிகளையும் பிடுங்கிக்கொண்டால் 3ஜி இந்தியாவில் தேவையே இல்லையே. அதையும் நீக்கிவிடலாம். எப்பொழுதும் போல 2ஜி சேவையை தொடர்ந்து அளித்து இந்தியாவையும் மொத்தமாக அழித்து விடலாம்.
இந்த நிலையில், ஸ்கைப்'பின் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. உள்ளூர் வசதி கட்:நவம்பர் 10 ஆம் தேதியுடன் ஸ்கைப் வசதி மூலம் இந்தியாவில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகள் இடையேயான உள்ளூர் அழைப்பு வசதி ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ளசெல்போன்கள், தொலைபேசிகளுக்கும் ஸ்கைப் வசதி மூலம் இலவசமாகப் பேசிக்கொள்ளும் வசதி தொடர்ந்து நீடிக்கும்.
மேலும், ஸ்கைப் மூலமான வை-பை, குறுஞ்செய்தி வசதிகளை இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாப்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாய்ஸ் அழைப்புகளை இனி அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப்., அறிவித்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக