திங்கள், 6 அக்டோபர், 2014

பரப்பன அஹ்ரகாரத்தில் 144 தடை ! ஜெயலலிதா ஜாமீன் விசாரணை நாளை !

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பரப்பன அஹ்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27ம் தேதி முதல் சிறையில் உள்ள அவரது ஜாமின் மனு மீது நாளை(செவ்வாய்கிழமை) கர்நாடக உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.இதனையொட்டி கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் பரப்பன அஹ்ரகாரா சிறை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாளை நண்பகல் 12 மணியளவில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது.  மேலும் ஜெயலலிதா, சசிகலா  உள்ளிட்டோர் தங்களுக்கு விதிக்கபட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளது.ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகின்றனர் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக