புதன், 22 அக்டோபர், 2014

பிரிட்டன் தம்பதியர் ஆக்ரா ஒட்டலில் மர்ம மரணம்.

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதியரான ஆலிவர் கேஸ்க்கின்(28) மற்றும் அலெக்ஸாண்ட்ரா கேஸ்க்கின் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஆக்ரா நகரை வந்தடைந்தனர். அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர்கள், நேற்று காலை வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அவர்கள் படுத்திருந்த கட்டிலின் அருகே சில மருந்து பாட்டில்கள் கிடக்க, வாயில் நுரை தள்ளிய நிலையில் இருவரும் பிணமாக கிடந்ததை கண்ட ஊழியர்கள், போலீசாருக்கு புகார் அளித்தனர். விரைந்துவந்த போலீசார், பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள பிரிட்டன் நாட்டு உயர் தூதரகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக