புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளிக்கு தினசரி ஐந்து காட்சிகள் !

சென்னை,அக்.21 (டி.என்.எஸ்) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 நாட்களுக்கு திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி என மொத்தம் 5 காட்சிகள் படங்கள் திரையிடப்படுகிறது.;இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தீபாவளி பண்டிகையொட்டி வருகிற 23–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை அதிகப்படியாக ஒரு காட்சி (5 காட்சிகள்) நடத்தி கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தீபாவளி அன்றும் மற்றும் 25, 26–ந்தேதிகளில் அரசு விடுமுறை ஆனதால் அன்றைய தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு காட்சி நடத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக