வெள்ளி, 10 அக்டோபர், 2014

சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம் காரணம்! மருத்துவ அறிக்கை ! கொலையா ? தற்கொலையா ?

மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை, ‘சுனந்தாவின் உடலின் பல உறுப்புகளில் விஷம் பரவி இருந்ததே மரணத்துக்கு காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது. சுனந்தாவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, யாராவது அவருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனரா? என்பது தொடர்பாக இந்த அறிக்கையில் தெளிவான விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், சுனந்தாவின் மர்ம மரணம் தொடர்பாக விரிவான விசாரணை தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கொல்லம் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினராயி விஜயன் கூறுகையில், ’சுனந்தா இறந்த நாளில் இருந்து, இன்று வரை அவரது மரணத்துக்கு பின்னணியில் உள்ளது என்ன? என்பது தொடர்பாக நிச்சயமற்ற பல யூகங்கள் நிலவி வருகின்றன.

இவ்விகாரத்தில் உண்மையை அறிந்துக் கொள்ள இந்த நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, சுனந்தாவின் மரணத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என
தெரிவித்துள்ளார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக