ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கேரளா எல்லையில் அதிமுக அரசு மதுக்கடைகளை திறக்க முடிவு ! ராமதாஸ் கடும் கண்டனம் !

சென்னை: கேரள எல்லையில் புதிதாக மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.< இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரளத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் உன்னத நோக்குடன் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வரும் நிலையில், அம்மாநிலத்தையொட்டிய தமிழக எல்லைப் பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நடவடிக்கை எடுத்து வருகிறது. மது விற்பனையை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.பூரண மதுவிலக்கை நோக்கி செல்லும் கேரளா  மாநிலத்துக்கு கேடு விளைவிக்கும் இந்த செயலை மலையாளிகள் நம்ப சேட்டன் கட்சி என்று கொண்டாடும்  அதிமுக அரசுதான் செய்கிறது என்பதுதான்  வேடிக்கை கலந்த வேதனை !
தமிழ்நாட்டில் மற்ற அனைத்துத் தீமைகளையும்விட மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மது அரக்கன் தான். தமிழக மக்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமானால் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கடந்த 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மக்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்க மது, இலவசம், திரைப்படம் ஆகிய மூன்றை மட்டுமே ஆயுதமாக நம்பியிருக்கும் திராவிடக் கட்சிகள் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எக்காலத்திலும் தயாராக இல்லை. ஆனால், தனிநபர் மது நுகர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் கேரள மாநிலத்தின் ஆட்சியாளர்கள், மதுவின் தீமைகளை உணர்ந்து அங்குள்ள குடிப்பகங்கள் அனைத்தையும் மூடவும், மதுக்கடைகளை ஆண்டுக்கு 10% வீதம் மூடி அடுத்த 10 ஆண்டுகளில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக குடிப்பகங்களை மூடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்கனவே அறிவித்தவாறு அம்மாநிலத்திலுள்ள 389 மதுக்கடைகளில் 39 கடைகள் கடந்த 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் மூடப்பட்டன. அதேபோல், கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மதுவிலக்கை நோக்கிய இந்த நடவடிக்கைகளால் கேரளத்தில் குற்றங்கள் மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கேரளத்தைப் பின்பற்றி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டிலும் விபத்துக்களும், குற்றங்களும் குறையும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத தமிழக அரசு, அதற்கு முற்றிலும் எதிரான வகையில், கேரளத்தையொட்டிய தமிழக எல்லைப்பகுதிகளில் புதிதாக மதுக்கடைகளை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் புதிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை எதிர்த்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியிலுள்ள மக்களை தமிழக எல்லைக்கு அழைத்து மது குடிக்க வைக்க வேண்டும்; அதன்மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தமிழக அரசின் இந்த மலிவான நடவடிக்கைக்கு பின்னால் இருக்க முடியாது. மது விற்பனையை பெருக்கத் துடிக்கும் கள்ளச்சாராய வணிகரின் சிந்தனையைவிட தமிழக அரசின் இந்த சிந்தனை மிகவும் மோசமானதாகும். மதுவைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, அண்டை மாநில மக்களையும் கெடுக்கத் துடிப்பது பெரிய பாவச் செயலாகும்.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழும் போதெல்லாம், அதை மறுப்பதற்காக தமிழக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் வாதம், ''சுற்றிலும் பற்றி எரியும் நெருப்பு வளையத்திற்கு நடுவே கற்பூரமாக தமிழகத்தை வைத்திருக்க முடியாது" என்பது தான். அண்டை மாநிலத்து மது நெருப்பு தமிழகத்தை தீண்டிவிடக் கூடாது என்று கூறியவர்கள் இப்போது அவித்து வைக்கப்பட்ட கற்பூரமாக காணப்படும் கேரளத்தின் சில பகுதிகளை மது என்ற நெருப்பைக் கொண்டு பற்ற வைக்கத் துடிப்பது ஏன்? என்பதைத் தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

மக்கள் நலனில் அக்கறையில்லாமல் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்படக்கூடாது. கேரள எல்லைகளில் புதிதாக மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; அதுமட்டுமின்றி, கேரளத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் உடனடியாக முழு மதுவிலக்கை நடைமு  news.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக