ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வசந்த பாலனின் காவிய தலைவன் 14 தேதி வெளியாகிறது !


அரவான்' படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் 'காவியத் தலைவன்'. இப்படத்தில் சித்தார்த் ,ப்ருத்விராஜ் ,வேதிகா இவர்களுடன் நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். நாடகக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய கதையைக் கொண்ட 'காவியத் தலைவன்' படத்தில், கே.பி.சுந்தராம்பாளின் கதையும் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'காவியத் தலைவன்' படத்தின் டிரெய்லர், இந்தத் தீபாவளியை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. சென்சார் தரப்பு படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. ட்ரீம் ஃபேக்டரி வெளியிட உள்ள 'காவியத் தலைவன்' நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன விகடன்,com .அங்காடி தெரு மாதிரி இன்னொன்னு எடுங்க சார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக