திங்கள், 13 அக்டோபர், 2014

கலைஞரை கைது செய்ய அதிமுகவினர் போலீசுக்கு நிர்ப்பந்தம் ! குண்டர்களை ஏவி விட்டாராம்?

அ.தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது, போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரி மறுத்து விட்டார். அதனால், அவர் மீது, அ.தி.மு.க., தரப்பு கோபமாக உள்ளதாக தகவல் பரவி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பால், கடந்த 27ம் தேதி, ஜெயலலிதா கைதாகி சிறை சென்றதும், தமிழகம் முழுவதும் வன்முறைகள் வெடித்தன. இதில், ஒரு நிகழ்வாக, அ.தி.மு.க.,வினர், தி.மு.க., தலைவர் கருணாநிதி இல்லம் சென்று கல் வீசினர். அப்போது, அங்கிருந்த தி.மு.க., தொண்டர்களுக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க.,வினர் மீது, அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரில், தி.மு.க.,வினரை, வீட்டுக்குள் இருந்த கருணாநிதியும், ஸ்டாலினும் துாண்டினர் என்றும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கருணாநிதியையும், ஸ்டாலினையும் கைது செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் இருக்கும் இடத்துக்கு பொறுப்பான அதிகாரியை, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து நிர்பந்தம் செய்து வந்துள்ளனர்.தமிழகத்தை கொள்ளை அடித்த அம்மாவும்  அவரது கிளிசரின் கோஷ்டியும் ஆடும் வெறியாட்டம் சகிக்கலை ! யார் கண்டா சட்டத்தின் முன்  அனைவரும் சமம் என்று  பார்ப்பான் சோ கலைஞரை கைது செய்தே  தீரவேண்டும் என்று அறிக்கை விட்டாலும் விடுவான்யா ?
ஆனால், 'இருவரையும் கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை; எனவே, நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை' என, அந்த அதிகாரி சொல்லிவிட, அவர் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர் அ.தி.மு.க.,வினர்.

வழக்கு பதிவு:

இதுதொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வினர் தங்களை தாக்கிவிட்டதாக, அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர். அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல் உட்பட, ஐந்து பிரிவுகளில், 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின், தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. அதில், அ.தி.மு.க.,வினர் குறிப்பிட்ட விவரங்கள் பல தவறாக உள்ளன. அப்படிப்பட்ட நிலை யில், கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினால், அதனால், போலீசுக்கு தான், கோர்ட்டில் சிக்கல் ஏற்படும். அதனால், அ.தி.மு.க.,வினரின் வற்புறுத்தலுக்கு போலீஸ் அதிகாரி இணங்கவில்லை.அவர் மீது, அ.தி.மு.க.,வினர் கோபம் கொண்டு உள்ளனர். அதனால், என்ன ஆகிவிடப் போகிறது. மிஞ்சி மிஞ்சி போனால், 'டிரான்ஸ்பர்' போடுவார்கள். அதற்கு அந்த அதிகாரி தயாராகவே இருக்கிறார். ஆளுங்கட்சியினர் என்பதற்காக, சட்டத்தை மீறி எதையும் செய்ய முடியாது.இவ்வாறு, போலீஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக