ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சுப்ரமணியம் சாமிக்கு அதிமுக மகளிர் அணியினர் என்ன வரவேற்பு கொடுப்பாய்ங்களோ ? தாய்க்குலம் முன்போல் இம்முறையும் காபரே ஆடுவாய்ங்களோ ?

சென்னை: ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி முக்கியப் புள்ளியான சுப்பிரமணியம் சாமி சென்னைக்கு வரவுள்ளார். சாமி மீது ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சரமாரியாக அவதூறு வழக்குகளைப் போட்டார். இதையடுத்து கைது பயத்தால் சென்னை பக்கமே வராமல் இருந்தார் சாமி. தற்போது ஜெயலலிதா ஜெயிலுக்குப் போய் விட்ட நிலையில் சாமி சென்னைக்கு வரவுள்ளார். சென்னை வருகிறார் சாமி.. 'வரவேற்பு' கொடுப்பார்களா அதிமுகவினர்? . இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போக முக்கியக் காரணமானவர் சாமி என்பதால் அவர் மீது அதிமுகவினர் கடும் கோபத்துடன் உள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று இரவு சென்னைக்கு வருகிறார் சாமி. நாளை அவர் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தண்டனையில் இருந்து ஜெயலலிதா ஜாமீன் கேட்கும் விவகாரம், தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து "முக்கிய" பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் சாமி சென்னைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமியைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி கொடுத்த "பலத்த வரவேற்பு" மக்கள் கண்களிலிருந்து இன்னும் கூட மறையவில்லை. அந்த வரவேற்புக்குத் தலைமை தாங்கியவர் இப்போதைய அமைச்சர் பா. வளர்மதி ஆவார். எனவே இந்த முறையும் அதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக