வியாழன், 23 அக்டோபர், 2014

குஷ்பு தனிகட்சி தொடங்க போகிறார் ? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

சென்னை:தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் குஷ்பு சேரப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததாக கூறிய திமுகவினர் அரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர் மீது செருப்பு வீச்சும் நடந்தது. அதோடு, கட்சி கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றில் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்தார்.
இதனிடையே, திடீரென திமுகவில் இருந்து விலகுவதாக கூறிய கட்சித் தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். இதனையும் கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.Circumstantial Evidence is very strong to support this conclusion.

இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே, தீபாவளி சஸ்பென்சாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன். அதற்காக என்னை வாழ்த்துங்கள். என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்று இப்போது சொல்ல மாட்டேன். உடனே புதுப்படம் அல்லது தொலைக்காட்சியில் நடிக்கப் போகிறேன் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.news.vikatan.com அண்ணே செய்தி மட்டும்தான் விகடன் , செய்திக்கான தலையங்கம் என்னுது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக