ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஐஎஸ் தீவிரவாத கொடியுடன் காஷ்மீர் இளைஞர்கள் கோஷம் எல்லையில் மீண்டும் பரபரப்பு !

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடிகளை ஏந்தி இளைஞர்கள் சிலர் நேற்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக கொண்ட தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுவதும் ஆதரவு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர இளைஞர்கள் சிலர் சென்றுள்ளதாக கடந்த மாதம் உளவுத்துறை எச்சரித்திருந்தது.


இதற்கிடையில் கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தொழுகை முடித்து வெளியில் வந்த சிலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடிகளை ஏந்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா பேசுகையில், சில குறும்புக்கார வாலிபர்கள் இவ்வாறு கொடிகளை ஏந்தி கோஷமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். இதனை ராணுவ வட்டாரங்கள் மறுத்தன.

காஷ்மீரில் ஐஎஸ் ஆதரவு கவலை அளிக்கிறது என ராணுவ தளபதி ஒருவர் சில தினங்களுக்கு பேட்டி அளித்தார்.இந்நிலையில் நேற்று ஸ்ரீநகரில் ஜாமியா மஜித்தில் தொழுகை முடித்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கருப்பு கொடிகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இவ்வித போக்கு பரவி வருவது கவலை அளிக்கக் கூடியது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதத்தில் இது நான்காவது சம்பவம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக