ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தமிழ்செல்வன் வெற்றி !


மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் சியோன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட தமிழரான கேப்டன் தமிழச்செல்வனுக்கு பா.ஜ.க வாய்ப்பு வழங்கியது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தமிழச்செல்வன் 3738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு 40869 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சதாம்கர் மங்கேஷ் ஸ்ரீதருக்கு 37131 வாக்குகளும் கிடைத்தன. 3-வது இடம் பிடித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷெட்டி ஜெகன்னாத் அஞ்சண்ணாவுக்கு 23107 வாக்குகள் கிடைத்தது. முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தமிழ்ச்செல்வன் வெற்றி பெறும் நிலையில் உள்ளார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக