சனி, 13 செப்டம்பர், 2014

தீபிகா படுகோன் : சுவேதா செய்தது தப்பே இல்லை ! அவருக்கு நாம் ஆதரவு காட்டவேண்டும் !

குடும்பத்தை காப்பாற்ற சுவேதா பாசு பாலியல் தொழிலில் ஈடுபட்டதில் தவறில்லை என்றார் தீபிகா படுகோன்.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில்  நடித்திருப்பவர் சுவேதா பாசு. இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.  ‘எனது குடும்பத்தை காப்பாற்றவே விபசாரத்தில் ஈடுபட்டேன் என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவர் மீது  பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை குஷ்பு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ‘விபசாரத்தில் ஈடுபட்டதாக சுவேதா மீது நடவடிக்கை எடுக்கும்  போலீசார் அவருடன் பிடிபட்ட தொழில் அதிபரை தப்ப விட்டது ஏன் என்று சூடாக கேட்டிருந்தார். அதேபோல் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்  குரல்கொடுத்திருக்கிறார். ‘சுவேதா செய்ததில் தவறு ஒன்றுமில்லை. குடும்பத்தை காப்பாற்ற அவருக்கு வேறு வழியில்லாத நிலையில் இதுதான் ஒரே வழி  என்கிறபோது அவரால் என்ன செய்ய முடியும்? இதை சுட்டிக்காட்டி சுவேதாவை பற்றி இழிவாக பேசுவதை தவிர்த்து அவருக்கு எல்லோரும் ஆதரவு காட்ட முன் வர  வேண்டும் என்றார். இது பற்றி சில ஹீரோயின்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கருத்து கூறாமல் நழுவிவிட்டனர். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக