சனி, 13 செப்டம்பர், 2014

திருப்பதியில் ஆண்கள் இனி கட்டாயம் வேட்டி அணியவேண்டும் ! வேட்டி அணியாதோர் வெளியேற்றபட்டனர் !

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் என  அனைத்து ஆர்ஜித சேவைகளுக்கும் இந்துக்களின் சம்பிரதாய உடைகளான வேட்டி, சட்டையை ஆண்களும், பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என  கட்டாயமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி முதல் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இ-தரிசன கவுன்டர்கள்  மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெற்று தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக சம்பிரதாய உடை  அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்தது.இதேபோல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யக்கூடிய ரூ.50 சுதர்சன டிக்கெட் பெற்றுவரும்  பக்தர்களும் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்து தீவிரவாதம் அல்லது பயங்கர வாதம் பலமுகங்களில் தெரிகிறது


இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் பெற்று வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருந்த வரிசையில், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று திடீர் ஆய்வு  செய்தார். இதில் 40 சதவீதம் பக்தர்கள் சம்பிரதாய உடை அணியாமல் பேன்ட், சட்டை அணிந்து வந்திருந்தது தெரிந்தது. அவர்கள் அனைவரையும் வேட்டி அணிந்து  வரும்படி கூறி வரிசையில் இருந்து வெளியேற்றினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேட்டி கொண்டு வராத பக்தர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்  தவித்தனர். இந்நிலையில் தேவஸ்தானத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் சிலர் வேட்டிகளை எடுத்து வந்து  வரிசையில் நின்றிருந்தவர்களிடம் விற்பனைசெய்து, அவர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனத்துக்கு செல்ல ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து இணை செயல் அலுவலர்  கூறுகையில், திருப்பதியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் அனை வரும் கட்டாயமாக சம்பிரதாய உடைகள் அணிந்து வரவேண்டும். இது கட்டாயம்  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக