ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக படு தீவிரம் ! கேஜ்ரிவால் கடும் அதிருப்தி !

புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைய போகுதோ என்ற அச்சத்தில் குய்யோ., முறையோ என, கதற துவங்கியிருக்கிறார். இங்கு பா.ஜ., ஆட்சி அமைந்தால் இது ஜனநாயக படுகொலைக்கு சமமாகும் என கண்ணீர் விட்டு புலம்பி தீர்க்கிறார். ஆட்சியில் அமர்ந்து 49 நாட்களில் லோக்பால் விவகாரம் தொடர்பாக சில பிரச்னைகள் கிளப்பி கெஜ்ரிவால் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து இங்கு ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது . இங்கு யார் ஆட்சி அமைப்பது என்பதும், தொடர்ந்து தேர்தலை நடத்தலாமா என்றும் சட்ட ரீதியான வழிமுறைக்கு உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. 
மறுதேர்தல் வந்தால் பாஜக ஏன் கவலைப்பட வேண்டும்? தேர்தல் நடத்தவேண்டியது தானே? இடைதேர்தலில் வாங்கிய அடி இங்கேயும் விழுமோ என்ற கவலையாக இருக்கும்,
இந்நிலையில் இங்கு தற்போது மெஜாரிட்டி எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட கட்சியான பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்ற முடிவுக்கு துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி மாஜி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது; தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வை அழைத்தால் இங்கு குதிரை பேரம் நடக்க துவங்கும். கவர்னர் அனுப்பியுள்ள பரிந்துரையை ஜனாதிபதி ஏற்க கூடாது. அவர் தலையிட்டு நல்ல முடிவை காண வேண்டும். பா.ஜ., ஏன் தேர்தலை சந்திக்க தயங்குகிறது ? பா.ஜ., எப்படி ஆட்சி அமைக்க முடியும் ? எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி குதிரை பேரம் நடத்தி மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்கும். ஒரு எம்.எல்.ஏ,.வுக்கு ரூ. 20 கோடி வரை பேரம் பேசப்படுகிறது.

எங்களின் கட்சி நிலையை தெளிவாக தெரிவித்து விட்டோம். இங்கு தேர்தல் நடப்பதே நியாயமானதாகும். பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைத்தால் மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகும். இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் படுகொலையாகும். நாட்டில் நடக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், பணவீக்கம் குறித்து பா.ஜ., கவலை கொள்ளவில்லை. குதிரை பேரம் நடத்துவதிலேயேதான் குறியாக இருக்கிறது.

எங்களின் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். யாரும் விலை தருவதாக பேசினால் மறுக்காமல் இந்த உரையாடலை பதிவு செய்ய கேட்டுள்ளேன். ஒருவேளை பா.ஜ., ஆட்சி அமைத்தால் நாங்கள் சட்டசபையில் இதனை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது போல் ஆம்ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள கருத்தில், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் இது ஜனநாயகத்திற்கு அபாயகரமானது. பணம் கொடுத்து எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால் அது மக்களுக்கு பயன்தராது. இவர்கள் மீண்டும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மொத்தம் எம்.எல்.ஏக்கள் : டில்லியில் உள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மிக்கு 28 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு 31 தொகுதிகளும், காங்கிரசுக்கு 8 தொகுதிகளும், சிரோண்மனி அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சுயேச்சை ஆகிய கட்சிக்கு தலா ஒரு சீட்டும் கிடைத்தது. காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் முதல்வரானார். மெஜாரிட்டியை நிரூபிக்க மொத்தம் 34 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பா.ஜ.,விடம் தற்போது 31ல் ஹர்சவர்த்தன், ரமேஷ்பித்துரி, பர்வேஸ் வர்மா ஆகியோர் எம்.பி,.யாக தேர்வு செய்யப்பட்டதால் இவர்கள் ராஜினாமாவுக்கு பின்னர் பா.ஜ.,உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 28 ஆக உள்ளது. அகாலி தளம் ஆதரவுடன் 29 . மெஜாரிட்டியை நிரூபிக்க இன்னும் 5 எம்.எல்.,ஏக்கள் பா.ஜ.,வுக்கு வேண்டும்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக