ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

நவாஸ் ஷெரீபை கவிழ்ப்பதற்காகவே இந்தியா மீது போர்தொடுக்க போகிறது பாகிஸ்தான் ராணுவம் ?

பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் தீவிரவாதம் மூலம் மறைமுகமாக இந்தியாவை அச்சுறுத்தவும் தங்கள் நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு நெருக்கடி கொடுக்கவும் முயன்று வருகின்றன' என்று அமெரிக்காவின் உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி கூறியுள்ளார்.
சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஆய்வாளர் புரூஸ் ரீடல் இதுகுறித்து, "டெய்லி பீஸ்ட்' என்ற அமெரிக்க செய்தி வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அல்-காய்தா அமைப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள விடியோவில், இந்திய துணைக்கண்டத்தில் புதிய கிளையைத் தொடங்கப் போவதாக அதன் தலைவர் அய்மான்-அல்-ஜவாஹிரி அறிவித்தார்.

பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துகொண்டு அவர் அந்த விடியோவை வெளியிட்டுள்ளார். அவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உதவி செய்து வருகிறது. மேலும், அவர் நீண்ட காலமாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடனும், அதன் தலைவர் ஹபீஸ் சையதுடன் தொடர்பில் உள்ளார்.
மேலும், பாகிஸ்தான் உள்நாட்டு அரசியலில் அவர்கள் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பொதுத்தேர்தலில் நரேந்திர மோடி வெற்றிபெற்ற பிறகு, பதவியேற்பு விழா நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை இழிவுபடுத்தும் நோக்கத்திலேயே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
எனவே, ஐஎஸ்ஐ ஒப்புதலின்றி இந்திய தூதரகத்தின் மீது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதும், அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி, அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்து பேட்டியளித்து வருகிறார்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப், தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றபோதிலும், முன்னாள் ராணுவதலைமைத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் மீது தேசத் துரோக வழக்கு தொடர்ந்து, அவரை நாட்டைவிட்டு வெளியே செல்ல முடியாதவாறு தடுத்ததால், ஷெரீஃப் மீது ராணுவத்தினர் அதிருப்தியில் உள்ளனர். மும்பைத் தாக்குதலைப் போன்றோ, ஹெராட் தாக்குதலைப் போன்றோ மேலும் ஒரு தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா நடத்தினால், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக