செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஸ்டாலின் : 2016-இல் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமையும் !

அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதியிடம் விருது பெற்ற (இடமிருந்து) நடிகர் குமரிமுத்து (கலைஞர் விருது), ஏ.எஸ்.முனவர் ஜான் (அண்ணா விருது), புதுக்கோட்டை விஜயா (பாவேந்தர் விருது), வி.டி.சண்முகம் (பெரியார் விருது). உடன் (இடமிருந்து) கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரை.முருகன், பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன்.மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு மூலம் திமுவில் இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதியிடம் விருது பெற்ற (இடமிருந்து) நடிகர் குமரிமுத்து (கலைஞர் விருது), ஏ.எஸ்.முனவர் ஜான் (அண்ணா விருது), புதுக்கோட்டை விஜயா (பாவேந்தர் விருது), வி.டி.சண்முகம் (பெரியார் விருது). உடன் (இடமிருந்து) கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரை.முருகன், பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன். வரும் 2016-இல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் அரசியல் படிப்பதற்காக திமுக  மிக பெரும் விலையை கொடுத்துவிட்டது ! கலைஞரே பாசம் இருக்கவேண்டியதுதான் ஆனா கழகமே காணாமல் போகுமளவுக்கு தேவையா ? இனியாவது நல்லது நடந்தா சரி !

மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு மூலம் திமுவில் இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:
2008-இல் திமுகவின் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.
அந்த விழாவில் கருணாநிதிக்கு பெரியார் விருதும், ஆற்காடு வீராசாமிக்கு அண்ணா விருதும், துரைமுருகனுக்கு பாவேந்தர்
விருதும் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த விழாவில் எனக்கு மட்டும் மூன்று விருதுகள் கிடைத்தன. பெரியார், அண்ணா, கலைஞர் என மூன்றும் இணைந்த கலைஞர் விருது கிடைத்தது. இதை விட பெரிய பெருமை ஒருவருக்கு இருக்க முடியுமா?
எம்.ஜி.ஆர்., பிரிந்து சென்றார். வைகோ பிரிந்து சென்றார். அதனால் எல்லாம் திமுக அழிந்துவிடவில்லை. இன்றும் திமுக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு கருணாநிதியின் உழைப்புதான் காரணம்.
கருணாநிதி இல்லாவிட்டால் நாடு இல்லை. வீடு இல்லை. நான் இல்லை. ஒருமுறை ஸ்டாலினிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கருணாநிதியிடம் கேள்வி  எழுப்பப்பட்டது. அதற்கு கருணாநிதி, உழைப்பு என்று கூறினார். இந்தப் பாராட்டை விட எனக்கு வேறு எந்தப் பதவியும் தேவையில்லை. கருணாநிதி விரும்பும் அந்த உழைப்பையே தர விரும்புகிறேன்.
துரைமுருகன் பேசுசியபோது கூறியதை, அப்படியே இங்கு வழிமொழிந்து சொல்கிறேன்.
2016-இல் கருணாநிதி தலைமையிலேயே திமுக ஆட்சி அமையும் என்றார் மு.க.ஸ்டாலின்.
விழாவில் பெரியார் விருது வி.டி.சண்முகத்துக்கும், அண்ணா விருது ஏ.எஸ்.முனவர் ஜானுக்கும், பாவேந்தர் விருது புதுக்கோட்டை விஜயாவுக்கும், கலைஞர் விருது குமரிமுத்து
வுக்கும் வழங்கப்பட்டன. ரூ.50 ஆயிரம் பொற்கிழியும், கேடயமும் கொண்ட இந்த விருதுகளை கருணாநிதி வழங்கினார்.
மேலும் 2014-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கான பரிசுகளையும், 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விருதுகளையும் கருணாநிதி வழங்கினார்.
ஜனநாயகத்தை காப்போம்: கருணாநிதிபணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் கருணாநிதி பேசியது:
எந்த நோக்கத்துக்காக திமுக தோன்றியதோ, அந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டனவா என்றால், இல்லை. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. அது இன்னும் நிறைவேறவில்லை.
எனவே, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் நமது நோக்கம் இல்லை. ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் பிடித்துவிடலாம். 
இப்போது தேர்தலில் பணநாயகமே கோலோச்சுகிறது. பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற நிலை இருக்கிறது. அந்த நிலையை மாற்றி, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக