செவ்வாய், 16 செப்டம்பர், 2014

லிபியாவில் அகதிகள் சென்ற கப்பல் மூழ்கியது 200 பேர் கதி என்ன?

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் லிபியா மற்றும் சிரியாவில் இருந்து அனுமதியின்றி படகுகளில் சட்டவிரோதமாக செல்கின்றனர். அவ்வாறு 250 ஆப்பிரிக்க அகதிகள் ஒரு கப்பலில் சென்றனர். லிபியா தலைநகர் திரிபோலி அருகே தஜீரா என்ற இடத்தில் நடுக்கடலில் சென்றபோது கப்பல் மூழ்கியது. தகவல் அறிந்ததும் லிபியா கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். தீவிர முயற்சிக்கு பின்னர் 26 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. இதுகுறித்து கப்பல் படை செய்தி தொடர்பாளர் அயூப் குசும் கூறுகையில், ‘கடலில் ஏராளமான பிணங்கள் மிதக்கின்றன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. daiyllythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக