மிகக் குறுகிய காலத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.)
அமைப்பு வளர்ச்சியடைந்ததன் காரணமாகவே, அந்த அமைப்புக்கு எதிரான
அமெரிக்காவின் அணுகுமுறை பிற அமைப்புகளுக்கு எதிரான அணுகுமுறையிலிருந்து
மாறுபட்டிருப்பதாக அதிபர் ஒபாமாவுக்கான உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் லிசா
மொனாக்கோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள நிலையில், ஐ.எஸ். அமைப்பினால் அமெரிக்காவுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல், பிற அமைப்புகளினுடைய அச்சுறுத்தல்களிலிருந்து வேறுபட்டுள்ளதாக லிசா மொனாக்கோ கூறியுள்ளார். முதல்ல சவுதியின் இஸ்லாமிய பயங்கரவாத ஏற்றுமதியை தடுத்து நிறுத்துங்க . வஹாபி தீவிரவாதம்தான் சவுதியின் மிகபெரும் ஏற்றுமதி ?
அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கும் தனது எண்ணத்தை ஐ.எஸ். அமைப்பு ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த அமைப்பில் சுமார் 10,000 பேர் உள்ளனர் என உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால், 20,000-லிருந்து 31,500 பேர் வரை அந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக மறுநாளே சி.ஐ.ஏ. தெரிவித்தது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தலைக் கணிக்க முடியாமல் அமெரிக்க உளவு அமைப்புகள் திணறுவதையே இது காட்டுகிறது.
அமெரிக்கா மீதான நேரடித் தாக்குதலில் ஐ.எஸ். ஈடுபடவில்லை.
அனால், கணிப்பைத் தாண்டிய ஐ.எஸ்.ஸின் எழுச்சியும், பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளின் மனதில் அந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ள பதற்றமும் ஐ.எஸ்.ஸýக்கு எதிரான ராணுவத் தாக்குதலை மேற்கொள்ள ஒபாமாவைத் தூண்டியுள்ளன.
சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியது அமெரிக்க அதிகாரிகளை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரவணைப்பில் வளர்ச்சியைடைந்த அல்-காய்தா அமைப்பு காரணமாக இருந்தது.
அதே போன்று இராக், சிரியாவில் ஐ.எஸ். வளர்ச்சியை அப்படியே விட்டுவிட்டால் அது எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலுக்கு வழி வகுக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் சிரியா சென்று, அங்கு ஐ.எஸ்.ஸில் இணைந்து பயிற்சி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர் என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக