திங்கள், 18 ஆகஸ்ட், 2014

RSS தலைவர் : இந்துத்வா தான் இந்தியாவின் அடையாளம் ! ம்ம்ம் தொடங்கிடாய்ங்க !

இந்தியா ஒரு இந்து நாடு, இந்துத்வா அதன் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். பரபரப்பு பேச்சு  ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் நேற்று மும்பையில் நடைபெற்ற கிருஷ்ண ஜனமஸ்தமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:– இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா (இந்து மதம்) அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய மதம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும்.
ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு மோகன் பகவத் கூறினார். இந்து மதத்தில் இவ்வளவும் குப்பைகள் இருக்கின்றன என்று பகிரங்க முழக்கம் இட்டதற்கு நன்றி தலீவா ? ஆனா என்ன நீங்க அல்லாரும் வரலாற்றில குப்பையல தாய்ன் போக போரீகடோய்


சர்ச்சை

‘இந்தியா, இந்துக்களின் நாடு’ என்று மோகன் பகவத் கூறி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் சர்ச்சையின் பிடியில் சிக்குவது இது ஒன்றும் புதிது அல்ல.

ஏற்கனவே கடந்த வாரம் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியர்களின் கலாசார அடையாளமே இந்து மதம் தான். தற்போது வாழும் இந்துக்கள் அனைவரும் மிக பெரிய கலாசாரத்தின் சுவடுகள். ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்கள் ஆங்கிலேயர்களாகவும், ஜெர்மனியர்களின் சந்ததிகள் ஜெர்மனியர்களாகவும் இருக்கும்போது இந்துக்களின் வழித்தோன்றல்கள் ஏன் இந்துக்களாக இருக்க கூடாது என்று கூறி சர்ச்சையின் பிடியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக