திங்கள், 18 ஆகஸ்ட், 2014

காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன? அந்தோணியின் கண்டுபிடிப்புக்கள் !

புதுடில்லி:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இதனால், லோக்சபாவில் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து, 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசின் மோசமான தோல்விக்கு, கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் மோசமான அணுகுமுறையும், திட்டமிடப்படாத தேர்தல் பிரசாரமுமே காரணம் என, கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இது, கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.இதையடுத்து, கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.அந்தோணி தலைமையில் நால்வர் குழுவை அமைத்தார்.இந்த குழு பல்வேறு கோணங்களில் ஆராந்து, கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுலை காப்பாத்த இந்த மல்லு  அதிமுக அடிமைகள் ரேஞ்சுக்கு கால் கழுவிஇருக்கு, சரியாக சொல்லப்போனால் இன்னொரு மல்லுவான சாக்கோ சேட்டன் திமுகவுக்கு குழி பறிக்கிறேன்  பேர்வழின்னு டூ ஜி அறிக்கை பண்ணி பண்ணி  காங்கிரசுக்கே  குழி பறிச்சிட்டான்ல . அத்தை ஏன் கண்டுக்காம விடுறீக ? பூனை கண்ணை முடிடுச்சு


நால்வர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
*கட்சியின் மத்திய தலைவர்களுக்கும், மாநில தலைவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை நிலவியதே தேர்தல் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
*சிறுபான்மையினர் நலன் பற்றி அதிகம் பேசிய காங்கிரஸ், தன் 10 ஆண்டு கால ஆட்சியில் சிறுபான்மையினர் நலனுக்காக பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்றவில்லை என, பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவியது.
*மதச்சார்பின்மை என்ற ஒற்றை ஆயுதத்தை மட்டுமே கையில் ஏந்தி, மக்களுக்கு தேவையான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாதது.
*கட்சியின் தேசிய செயலர்கள், தேசிய தலைவர்கள் மாநில அரசியலில் அதிக ஈடுபாடு காட்டாதது.
*'சிறுபான்மையினரின் நலனில் அக்கறை செலுத்தப்படும்' என, மேடையெங்கும் முழங்கியது, பெரும்பான்மை மக்களிடையே கட்சியின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்தது.
*கடந்த, 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தமே இல்லாத வகையில் ஆட்சி செய்தது.இதுபோன்ற காரணங்களால், காங்கிரஸ் இதுவரை சந்தித்திராத வகையில் மோசமான தோல்வி அடைந்ததாக, அந்தோணி தலைமையிலான நால்வர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக