திங்கள், 18 ஆகஸ்ட், 2014

யார் யார் உண்மையான இந்தியன் ? இனி மார்கண்டேயே கட்ஜுவே தீர்மானிப்பார் ?

புதுடில்லி: 'இந்துக்களும், முஸ்லிம்களும் உண்மையான இந்தியர்களாக இருக்க விரும்பினால், முதலில் அவர்களின் மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான கட்ஜு தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இந்துக்களை, மற்ற இந்துக்கள் சமமாக நடத்த வேண்டும். அவர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இந்துக்களுடன், மற்ற வகுப்பை சேர்ந்த இந்துக்கள் திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்துக்கள் உண்மையான இந்தியர்களாக ஆக முடியும்.அதேபோல், முஸ்லிம்கள் தங்கள் மதத்தினரிடையே காணப்படும் வேறுபாடுகளை மறந்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எண்ணதை கைவிட வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஒழிய வேண்டும். அப்போது தான், முஸ்லிம்கள் உண்மையான இந்தியர்கள் ஆக முடியும்.முதல்ல உன்வீட்டுல  அதை செய்து காட்டு , இதுவுல நமக்கு இன்னொரு சந்தேகம் நீ ஏதாவது சின்ன வீடு செட்டப் ஒன்னும் பண்ணல்லியே ? இந்த மாதிரி திடீர் டயலாக்கு விடுற பலபேர்  பின்னணியில வேற வேவகாரம்ல இருக்கு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக