திங்கள், 11 ஆகஸ்ட், 2014

Ex மத்திய மந்திரி செல்ஜா வீட்டில் பணியாளர் அடித்து கொலை ?

புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குமாரி செல்ஜா வீட்டில் பணி புரியும் நபர் மர்மமாக இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இன்று காலை 42 வயதுடைய பணியாளர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக வந்து சடலத்தை மீட்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். "இறப்பு இயற்கைக்கு மாறானது. இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று மாநில போலீஸ் அதிகாரி எஸ்.பி.எஸ். தியாகி கூறியுள்ளார். இதற்கிடையே அவரது உடலில் காயங்கள் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பணியாளர் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக