திங்கள், 11 ஆகஸ்ட், 2014

20 ஆண்டுக்கு பின் லாலு ... நிதீஷ் நட்பு !லாலுவின் வீட்டிற்கு அருகில் குடியேற நிதிஷ்குமார் முடிவு -

பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் புதிய வீட்டிற்கு குடிபோகிறார். தற்போது, புதிய கூட்டணியின் மூலமாக நெருங்கியுள்ள லாலுவின் வீட்டிற்கு
அருகிலேயே உள்ள புதிய வீட்டிற்கு நிதிஷ் குடிபுகுகிறார்.பீகார் அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவும், கடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு நெருக்கம் காட்டத் தொடங்கினர். ராஜ்யசபா இடைத்தேர்தல் மற்றும் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜியின் ஆட்சிக்கு ஆதரவு என படிப்படியாக லாலுவின் உதவியை நிதிஷ் நாடியதன் மூலம் இருவருக்கும் இடையிலான அரசியல் நெருக்கம் அதிகரித்தது. இதனையடுத்து, பீகாரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் லாலு, நிதிஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்துள்ளனர்.


இதனால் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று, லாலுவும், நிதிஷூம் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.இதற்கிடையே, லோக்சபா தேர்தல் தோல்வியை ஒட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், தான் குடியிருந்து வந்த அரசு பங்களாவை காலி செய்து விட்டு ஸ்டிரான்ட் சாலையில் உள்ள எம்2 இல்லத்தில் குடியேறினார். முதல்வர் பதவியை விட்டு விலகிய பிறகு இரண்டாம் முறையாக மீண்டும் புதிய வீட்டிற்கு குடியேற முடிவு செய்துள்ளார். தற்போது நிதிஷ் குடியேற உள்ள சர்குலர் சாலையில் உள்ள 7ம் நம்பர் வீடு தனது புதிய அரசியல் நண்பரான லாலுவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடாகும். அதே சாலையில் உள்ள 10ம் நம்பர் வீட்டில்தான் லாலு, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. - See tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக