ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தனுஷ்-அக்ஷரா கெமிஸ்ட்ரி தூள் கிளப்புகிறது !

சென்னை:தனுஷ்-அக்ஷரா கெமிஸ்ட்ரி பற்றி கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் கமென்ட் அடித்தார்.கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனுடன் ‘3' என்ற படத்தில் ஜோடி போட்ட தனுஷ் தற்போது இளைய மகள் அக்ஷராவுடன் ‘ஷமிதாப்' என்ற படத்தில் ஜோடி போடுகிறார். இது அக்ஷரா அறிமுகமாகும் படம். அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அமிதாப் நடித்த ‘பா‘ படத்தை இயக்கிய பால்கி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. பாடல் காட்சியில் அக்ஷரா - தனுஷ் நடித்தனர். இதுபற்றி ஸ்ரீராம் தனது ட¢விட்டர் பக்கத்தில் கூறும்போது,‘ஷமிதாப் படத்தில் அக்ஷராவின் நடிப்பை பார்க்கும்போது இந்திய சினிமாவில¢ மற்றொரு பெண், தரத்துடன் வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவரது நடிப்பு உச்சத்தை தொடுவதாக இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனுஷ் பற்றி கூறும்போது, ‘அக்ஷராவுடன் தனுஷ் நடன காட்சியில் தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார். அவரது ஹை ஓல்ட் எனர்ஜி மும்பை முழுவதும் அதிர்கிறது' என்றார்..tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக