ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

திமுகவில் இருந்து பலரை அதிமுகவுக்கு மாற்ற முயற்சி நடக்கிறது ! அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் 8000 பேர் ???

யாருக்காகவும் கட்சியை இனி விட்டுக் கொடுக்க முடியாது; எல்லோரையும் அரவணைத்து செல்லுபவர்தான், கட்சியை வழி நடத்தி செல்ல முடியும்,'' என, தி.மு.க., தலைவர் கருணா நிதி பேசியதாக, வெளியாகி இருக்கும் தகவலைத் தொடர்ந்து, ஸ்டாலின் தரப்பு, 'அப்செட்' ஆகி இருக்கிறது.ஏற்கனவே, 2011ல் நடந்த சட்டசபை தேர்தல், அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல்கள், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல், இப்படி எல்லா தேர்தல்களிலும் தி.மு.க., தோல்வி அடைந்ததால், கட்சி இனி என்னாகும் என்ற கேள்வி, கட்சியின் அடிமட்ட தொண்டன் வரையில் எழுந்திருக்கிறது.இதற்கிடையில், கட்சிக்குள்ளும் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என, அணி பிரிந்து நின்று மோதிக் கொள்ள, 'கட்சியை இனி எப்படி துாக்கி நிறுத்துவர்?' என்ற அச்சம், தலைவர்களைக் காட்டிலும் தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதனால், விரைவிலேயே முகாம் மாறி விடலாமா என்ற எண்ணம், கட்சியினருக்கு ஏற்பட, அதை அ.தி.மு.க., தரப்பு வசதியாக பயன்படுத்தி, தி.மு.க.,வை கரைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.  அதிமுக காரைங்க பேசாம கம்முனு இருந்தாலே போதும் ஸ்டாலினே திமுகவை கன கச்சிதாம ஒருவழி பண்ணிடுவார்ல ? ம்ம் ஓரளவு பண்ணிபுட்டார்
முதல்கட்டமாக கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் துாத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற, முன்னணியினரை முகாம் மாற்றும் முயற்சி நடக்கிறது.எட்டாயிரம் தி.மு.க.,வினரை திரட்டி, துாத்துக்குடியில், அவர்களை ஜெயலலிதா முன்பாக சேர வைக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக, துாத்துக்குடிக்கு, ஜெயலலிதாவை வரவழைக்கவும் முயற்சிக்கின்றனர். இதை அறிந்து, கவலையடைந்திருக்கும் கருணாநிதி, அதை தடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்குப் பின் கட்சிக்கு கடுமையான சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம், சமீபத்தில் கருணாநிதியை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டி பேசி, வருத்தப்பட்டார். அப்போது, மூத்த தலைவரை தேற்றிய கருணாநிதி, 'அதையெல்லாம் எதிர்கொண்டு, அரசியல் செய்கிறவன்தான் அரசிய ல்வாதி. வெற்றி வரும்போது கொண்டாடி விட்டு, தோல்வி வந்ததும் துவண்டு விட்டால், தி.மு.க., என்ற கட்சி என்றோ, காணாமல் போயிருக்கும்,' என, சொல்லியிருக்கிறார்.

சாதுர்யம்:

கூடவே, பழைய விஷயங்களை குறிப்பிட்டும் பேசியிருக்கிறார். 80ல் எம்.ஜி.ஆர்., முதல்வர் ஆனதும் கட்சி அவ்ளோதான் என்றனர். ஆனால், சாதுர்யமான நடவடிக்கைகளால், 83ல் காங்கிரசுடன் கைகோர்த்து, விசுவரூபம் எடுத்து நின்ற எம்.ஜி.ஆரை, உப்பிலியாபுரம், தஞ்சாவூர் தவிர மயிலாடுதுறை மற்றும் அண்ணாநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வீழ்த்திக் காட்டிய கட்சி தான் தி.மு.க., அதன்பின் கட்சி ஆட்சிக்கு வந்து, மாறி மாறி வெற்றியும் தோல்வியையும் சந்தித்தது.ஆனால், சமீபத்திய தோல்விகள் அப்படியல்ல; தி.மு.க.,வின் ஓட்டு வங்கியிலும் ஓட்டை விழுந்திருக்கிறது. இதற்கு காரணம் கோஷ்டி பூசல்தான். அதை ஒழித்தாக வேண்டும்.கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்தின், எம்.ஜி.ஆர்., ஆசைத்தம்பி, என, எல்லோரையும் அண்ணா அரவணைத்து அரசியல் நடத்தியது போல, கட்சியில் எல்லோரையும் அரவணைத்து செல்பவர்தான், தலைவராக முடியும்.அந்த பக்குவம் இல்லாதவர்கள், கட்சிக்கு தேவையில்லை. கட்சியில், யாருக்காகவும் அடுத்தவரை புறக்கணிக்க முடியாது. கட்சியில் அதிருப்தியுடன் உள்ளவர்களை சமாதானப்படுத்தவும் திட்டம் இருக்கிறது என்றெல்லாம், சொல்லியிருக்கிறார்.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக