சனி, 16 ஆகஸ்ட், 2014

விஜய மல்லையாவின் வீட்டில் கொலை ! பாதுகாப்பு அதிகாரியை கொன்றது யார் ?

கோவாவில் உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மால்யாவின் ‘கிங்ஃபிஷர் வில்லா’வில் பாதுகாவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “பீகாரைச் சேர்ந்த சரஜ் குமார் சிங் என்பவர் விஜய் மால்யாவின் ‘கிங்ஃபிஷர் வில்லா’வில் பாதுகாப்பு அதிகாரியாக பணிப் புரிந்துவந்தார். அவர் வெள்ளிக்கிழமையன்று மர்மமான முறையில் மரணம் அடைந்ததையடுத்து, அது தொடர்பாக கலன்குட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தனர்.
சரஜ் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக கோவா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பணக்காரன் வீடுகளில் இதெல்லாம் சகஜமப்பா . ஏழைக்கு நீதி கிடைக்காது . அதுவும் ஒண்ணாந்தர கேடி சாராய பிளஸ் விமான செர்விஸ் பிளஸ் ராஜ்யசபா முதலையான மல்லைய இதுபோல எத்தனை பண்ணினானோ யாருக்கு தெரியும் ? 900 கோடி அரசு வங்கி கடனுக்கு டிமிக்கி கொடுத்தவனுக்கு இது ஜுஜுப்பீ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக