சனி, 16 ஆகஸ்ட், 2014

கவர்ச்சியாக நடித்து அப்புறம் கண்ணீர் விட்ட ஹன்சிகா !

மீகாமன் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் கவர்ச்சியான உடையில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்துவிட்டு கதறி அழுதிருக்கிறார் ஹன்சிகா. இதனை படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியே தெரிவித்தார். மீகாமன் படத்தில், "காமம் என்பது ரொம்ப வலியானது, ஆனாலும் சுகமானது " என்று தொடங்கும் பாடல் இடம்பெறுகிறது. ஆர்யா, ஹன்சிகா நடித்த இந்தப் பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான உடை ஹன்சிகாவுக்கு தரப்பட்டது. மேலும் ஆர்யாவுடன் மிக நெருக்கமாக இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பாடல் காட்சி முடிந்ததும் ஹன்சிகா ஓரமாக அமர்ந்து அழுதிருக்கிறார்.

மகிழ்திருமேனி காரணம் கேட்டதற்கு, இந்தளவு கவர்ச்சியாக நான் நடித்ததில்லை. ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் மரியாதையே போய்விடும் என்றிருக்கிறார் எடிட்டிங், மிக்சிங் எல்லாம் முடிந்த பிறகு நீங்களே விரும்புகிற அளவுக்கு பாடல் இருக்கும் என்று அவரை மகிழ்திருமேனி சமாதானப்படுத்தியிருக்கிறார்.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக