சனி, 16 ஆகஸ்ட், 2014

தமிழக பாஜக புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்! காங்கிரஸ் குமரி ஆனந்தனின் மகள் !

தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் இன்று பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவராக ஏற்கனவே பணியாற்றியவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக விதிகளின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் மாநிலத் தலைவராக இருக்க முடியாது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராகி விட்டதால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாநிலத் தலைவர் பதவிக்காக பலரும் டெல்லியில் முகாமிட்டு மேலிடத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுத்தனர். ஹெச் .ராஜாதான் தமிழக பாஜக தலைவராக வருவார் ஏனென்றால் அவர்தான் ஒரு அசல் பச்சோந்தி அடிமை. அப்படியானவங்கதான் மோடி காங்குக்கு தேவைன்னு சிலர் செய்த நெகடிவ் பிரசாரம் ஒர்க்காகி  கூஜா காலி !
பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு தமிழகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை அக்கட்சி தொடங்கியது. புதிய தலைவர் குறித்து கருத்துக் கேட்பதற்காக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் ஹெச். ராஜா தேசிய செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.. முதல் பெண் தலைவர் தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதாவின் முதலாவது பெண் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேசிய அளவில் பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி ஏற்கும் 2வது பெண் தமிழிசை. ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா அம்மாநில பாஜக தலைவராக ஏற்கெனவே பணியாற்றியவர்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக