திங்கள், 18 ஆகஸ்ட், 2014

ஹிட்லரை விட மோசமாக செயல்படுவேன்: தெலுங்கான சந்திரசேகர ராவ் ஒப்புதல் வாக்கு மூலம் !

ஐதராபாத்; முறைகேடுகளை தடுக்க, ஜெர்மனி மாஜி அதிபர் ஹிட்லரை விட மோசமாக செயல்படுவேன் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு கவர்னர் நரசிம்மன் கடும் முயற்சி எடுத்தார். இரு முதல்வர்கள் சந்திப்பதன் மூலம், இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக கவர்னர், இந்த நடவடிக்கை எடுத்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தான் ஜெர்மனியின் மாஜி சர்வாதிகாரி ஹிட்லரை போன்றவன். தன்னை பிறர் ஹிட்லர் என அழைப்பதில் கவலைப்படவில்லை. அட போய்யா  நீ கவலைப்படமாட்டே  மகளையும் எம்பியாக்கிட்டே , இனி மக்கள் அல்லவா கவலைப்பட போகிறார்கள் ?
முறைகேடுகளை தடுக்க தேவைப்பட்டால் ஹிட்லரை விட மோசமாக செயல்படுவேன். தெலுங்கானா மாநில அரசு சார்பாக மேற்கொள்ளவுள்ள சர்வே எடுக்கும் முடிவு சரியானது தான் கூறினார். மேலும் அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், 4,500 அரசு ஊழியர்களை பிரித்து கொள்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, நாளை ஆந்திர சட்டசபை துவங்கிய பின்னர், தெலுங்கானா மாநில சட்டசபையை துவக்கவும் முடிவு செய்யப்பட்டது. நாளை துவங்கும் ஆந்திர சட்டபை, செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவு பெறுகிறது.

இந்த சந்திப்பிற்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக