சனி, 16 ஆகஸ்ட், 2014

பொறியியல் படித்த பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது ! ஆணாதிக்கம் சினிமாவுக்கு அடுத்து இங்குதான் அதிகம் ?

சென்னை, ஆக.15- பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியி யல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப் பிற்குரிய பணிவாய்ப்பு களுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக் காட்டினர் உரிய கல்வித் தகுதி இருந்தும், அவர்கள் முறையாக நடத்தப்படாத தாலும், குறைந்த அளவி லேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணியாற்றுபவர் களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப் படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மில் வாக்கி பல்கலைக்கழகத் தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தக வலை வெளியிட்டுள்ளார்.
ஆய்வின் முதற்கட்ட மாக மூன்று ஆண்டு களில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)  ஆய் வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறைகளில் படித்தவர்களைக் கணக் கெடுத்துக் கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பொறி யியல் பட்டம் பயின்றவர் களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக்காட்டினர் பொறி யாளர்களாக உள்ளனர்.
11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழைய வில்லை. 21 விழுக்காட்டி னர் துறையில் பணியாற் றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையை விட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக் குள்ளாக துறையைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்ற வர்கள் பணிசெய்யுமிடங் களில் உரிய அளவில் ஏற்பாடுகள் இல்லாமை யால், குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வீட் டிலேயே இருந்துவிட் டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங் களின் நிர்வாகிகளாகவும், 22 விழுக்காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக்காட்டினர் அலு வலக ஊழியர்களாகவும் உள்ளனர்.
அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண் கள் துறையைவிட்டு வில கியதற்கு 17 விழுக்காட்டி னர் பாதுகாப்பு பொறுப் பின்மையையும், 12 விழுக் காட்டினர் போதுமான முன்னேற்றமின்மை யையும், 12 விழுக்காட்டி னர் துறையின்மீது ஆர்வ மின்மையையும் காரணங் களாகக் குறிப்பிட்டுள் ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர் வாகிகளாகவும், 15 விழுக் காட்டினர்  மேலாளர் களாகவும், 30 விழுக்காட் டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.
பெண்கள் பொறியா ளர்களாகப் பணிபுரியும் போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந் தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறுகின்றனர். அதேபோல் 15 விழுக் காட்டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்ப வர்கள், மற்றவர்கள் அலு வலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.
ஆதரவாக இருக்கக்கூடிய முதலாளிகள், உடன் பணியாற்றுபவர் கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறை களைக்கண்டு வாழ்க் கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின் றனர் என்று ஆய்வுத்தக வல்கள் கூறுகின்றன.
viduthalai.in/  http://idiva.com/news-work-life/maruti-suzuki-hires-more-women-engineers/20999   Maruti hires over 95% of its Graduate Engineer Trainees from campuses such as National Institutes of Technology — including Kurukshetra, Hamirpur, Jalandhar, Jamshedpur, Durgapur, Jaipur, and Bhopal; BITS-Pilani, and Delhi College of Engineering (now Delhi Technological University).

It recently also started hiring from women colleges such as Indira Gandhi Institute of Technology. Traditional male-dominated streams such as mechanical engineering and aerospace engineering are now attracting more female students. But the numbers need to grow a lot more to bring real diversity on factory floors.

Says Sonam Motwani, who heads a 70-member student automobile team at IIT-Bombay: “People have a set image that doesn’t allow them to step into so-called male bastions. I was elected to head the team that builds racing cars for international formula students’ competition. The chief mechanical engineer in my team is also a woman. The IIT structure empowers this.” There are seven women members on the team. Maruti Suzuki grooms women student engineers even when they are in college. It has adopted two women ITIs, one at Gurgaon and other at Jhajjar, Haryana.

Hiring women automobile engineers is a relatively recent phenomenon in India and even in the global auto hubs of the US and Europe, factory floors still remain male bastions. General Motors, Chrysler and Ford Motors, do have female auto engineers in senior management positions, but they are outnumbered by men. 

Author: Rica Bhattacharya

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக