செவ்வாய், 1 ஜூலை, 2014

CMDA விதிகள் தளர்த்தியதை சமாளிக்க ADMK அரசு நடவடிக்கை ! விழுந்த, 11 மாடி கட்டடத்துக்கு விதிகள் தளர்த்தப்பட்டது அம்பலம் !

CMDA விதிமுறை மீறல் ஒன்றும் புதிது இல்லை. எவனாச்சும் ஒரு நடுத்தர வர்க்கம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஒரு சின்ன வீடு கட்டலாம்னு பாத்தா தான் ஆயிரெதெட்டு குடைச்சல் கொடுப்பானுங்க...கத்தை கத்தையா லஞ்சம் கேப்பானுங்க.அதுக்கு தோதா அது நொட்டை இது நொட்டை, அந்த டாகுமென்ட் இல்லை, இந்த டாகுமென்ட் வேணும். அவனை பாரு, இவனை பாருன்னு அலைக்கழிப்பானுங்க... ஆனா பெரிய பில்டர்ஸ் எல்லாம் விதிமுறை மீறி எளிதாக கட்டலாம். அவர்கள் லம்பாக ஒரு அமவுண்டை கொடுத்து விடுவார்கள் மற்றும் ஏதாவது ஒரு மந்திரி அவர்களுக்கு சிபாரிசு பண்ணி விடுவார்கள்... போரூர், மணப்பாக்கம், மவுலிவாக்கம் ஏரியாவில் உள்ள நிறைய கட்டடங்கள் ஏரி இருந்த இடம்...ஏரியை ஆக்கிரமித்து நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன...அதற்கான விலையும் கொடுத்து தான் ஆக வேண்டும்..
சென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 மாடி கட்டடத்துக்கு அனுமதி அளிக்கும் போது, சில விதிகள் தளர்த்தப்பட்டது அம்பலமாகியுள்ள நிலையில், இத்திட்டத்தில் உள்ள விதிமீறல்களை ஆய்வு செய்ய, உயர்நிலைக் குழு அமைக்க, தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்கான பரிந்துரைகளை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், அரசுக்கு அனுப்பியுள்ளது.சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில், 'பிரைம் சிருஷ்டி' நிறுவனம் சார்பில், இரு பிரிவாக, 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தில் ஒரு கட்டடம், பணிகள் முடியும் நிலையில், கடந்த சனிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அந்த கட்டுமான திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், நேற்று முன்தினம், அரசுக்கு அறிக்கை அளித்தனர்.அந்த அறிக்கையில், சாலையின் அகலம், பக்கவாட்டு காலியிடம், அங்கீகாரமில்லாத மனை உட்பிரிவு உருவாக்குதல் ஆகியவற்றில் இருந்த விதிமீறல்களை வரன்முறை செய்து, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தது.விண்ணப்ப நிலையிலேயே, இத்திட்டத்தில் பிரச்னைகள் இருந்துள்ளதை உறுதி செய்யும் வகையில் அமைந்த இத்தகவல்கள், 'தினமலர்' நாளிதழில் வெளியானது.இதையடுத்து, அரசின் நற்பெயரை காப்பாற்றும் விதமாக, இப்பிரச்னையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால், பிரச்னையில் இருந்து தப்பிக்க, திட்ட அனுமதியில் விதிமுறைகள் மீறப்படவில்லை; கட்டுமான பணியில் தான் தவறுகள் நடந்துள்ளது என்ற ரீதியில், பல்வேறு குறிப்புகள் அடங்கிய இறுதி அறிக்கையை அரசுக்கு அனுப்ப, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி, பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டாவது கட்டடம்:



இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகில் உள்ள இன்னொரு கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து, சி.எம்.டி.ஏ., மற்றும் தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.அந்த கட்டடம், தரையில் ஒரு அடி ஆழத்துக்கு இறங்கியுள்ளதாக, அங்கிருந்தவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.மேலும், ஏற்கனவே பெற்ற திட்ட அனுமதியின் படி கட்டப்பட்ட கட்டடத்தில், ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ள நிலையில், அந்த அனுமதியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த கட்டடத்தை என்ன செய்வது என்பது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில், இடிந்த கட்டடம், அருகில் உள்ள அடுத்த கட்டடம் கட்டுமானத்தில் உள்ள விதிமீறல்களை ஆய்வு செய்யவும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை வழங்க, சி.எம்.டி.ஏ., அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., வல்லுனர்கள் அடங்கிய உயர்நிலைக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சரியா?


இதற்கான பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசின் ஆணை எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட அறிக்கையால், ஏற்பட்ட பிரச்னை காரணமாக தங்களுக்கு வரும் ஆபத்தை சமாளிக்கும் வகையிலும், பிரச்னையின் தீவிரத்தை குறைக்கும் நோக்கத்திலேயே, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த பரிந்துரையை அளித்துஉள்ளதாக தெரிகிறது.உண்மையிலேயே பிரச்னையை ஆராய வேண்டுமானால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இல்லாத உயர்நிலைக்குழுவை அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே நகரமைப்பு வல்லுனர்களின் கோரிக்கை.

- நமது நிருபர் -- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக